42 ரன்கள் எடுத்தால் வெற்றி.. ஆனா ஆட்டம் டிரா..! 10 நாட்கள் நடந்தும் பாதியிலேயே நின்ற டெஸ்ட் மேட்ச் - ஒரு சுவாரசிய வரலாறு!

Timeless Test Match in history ever
Timeless Test Match in history ever image source: cricket thrills
Published on

இந்த டெஸ்டில் இரண்டு ஓய்வு நாட்கள், ஒருநாள் முழுவதும் ஆட்டம் இல்லை மழையினால்.. அந்தத் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி என்பதால், முடிவு எட்டும் வரை விளையாடுவது என்று போட்டி தொடங்குவதற்கு முன்பே இரு அணிகளாலும் தீர்மானிக்கப்பட்டது.அந்த டெஸ்ட் மேட்ச் நடைப் பெற்றது தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மைதானத்தில் மார்ச் மாதம் 1939-ல்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் மேட்ச் நடைபெரும் பொழுது எதிர்பாராத திருப்பம் ஏற்படும் என்று யாரும் நினைக்கவில்லை.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆட துவங்கியது.சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி பந்து வீச தொடங்கினர்.பீட்டர் வான் டெர் பிஜில் 125 ரன்களும், கேப்டன் ஆலன் மெல்வில்லே 78 ரன்களும் எடுத்தனர். இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்திருந்தது.இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஸ்கோர் 6விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 423ரன்கள்.

மூன்றாவது நாள் முதல் ஓய்வு தினம்.தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக அணி முதல் இன்னிங்சில் 530 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர்.டட்லி நர்ஸ் 103 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரெக் பெர்க்ஸ் 100 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, ஐந்தாம் நாள் நடுப்பகுதியில் 316 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் லெஸ் ஆமிஸ் 84 ரன்களும், எடி பெயிண்டர் 62 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் எரிக் டால்டன் 4 விக்கெட்டுகளையும், சுட் லேங்டன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸ்:

ஆறாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் ஆல் அவுட் ஆகினார்கள் 481 ரன்களுக்கு.

முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய கேப்டன் ஆலன் மெல்வில்லே இந்த முறை நடுவில் ஆடி சதம் எடுத்தார்.103 ரன்கள்.துவக்க வீரர் பிய்ட்டர் வான் டெட் பிஜி இரண்டாவது இன்னிங்சிலும் சதம் எடுத்து இருக்க வேண்டியவர். 3 ரன்கள் வித்தியாசத்தில் சதத்தை மிஸ் செய்தார்.அவரது ஸ்கோர் 97. அடுத்த துவக்க வீரர் பிரஸ் மிச்செல் 89 ரன்கள் எடுத்தார்.இங்கிலாந்து அணியின் கென் பார்ன்ஸ் 4 விக்கெட்டுகளையும், டக் ரைட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முன் கூட்டியே முடிவு செய்த படி மீதி டெஸ்ட் நடைப் பெற வேண்டிய நாட்களுக்கு தடை ஏதும் இல்லை.இங்கிலாந்து அணி வெற்றி பெற 696 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது இன்னிங்ஸில் இது ஒரு இமாலய இலக்கு. ஆனாலும், முடிவு எட்டும் வரை ஆடலாம் என்ற விதி இருந்ததால் போட்டி தொடர்ந்தது.

இங்கிலாந்து அணியில் சிறந்த வீரர்கள் இருந்த பொழுதிலும் வெற்றி இலக்கு ரன்களை கவனித்த பொழுது அந்த தருணத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் கையயே ஒங்கி இருந்தது.அவர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் இருந்தது.

ஏழாம் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்திருந்தது. லென் ஹட்டன் 55 ரன்களில் ஆட்டமிழக்க, பால் கிப்ஸ் (78*) மற்றும் பில் எட்ரிச் (107*) களத்தில் இருந்தனர். எட்டாம் நாள் மழையினால் ஆட்டம் நடைபெறவில்லை. ஒன்பதாம் நாள் ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது ஓய்வு தினம்.

ஒன்பதாம் நாள் மேட்ச் விருவிருப்பாக நகர்ந்தது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் திறமை வெளிப்பட்டது.பால் கிப்ஸ் 120 ரன்களுக்கு அவுட் ஆனார்.​​​​​பில் எட்ரிஜ் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். 219 ரன்கள்.கேப்டன் வால்லி ஹம்மோன்ட் மற்றும் எட்டியே பைன்டர் விளையாடிக் கொண்டிருந்தனர் அன்றைய ஆட்ட முடிவில். ஸ்கோர் 496 / 3

பத்தாம் நாள் ஆட்டம் எதிர் பார்ப்புகளுடன் துவங்கியது.இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அவர்கள் அணி 600 ரன்கள் கடப்பதை உறுதி செய்தனர்.கேப்டன் வால்லி ஹம்மோன்ட் சதம் பூர்த்தி செய்தார்.

75 ரன்கள் எடுத்த எட்டியே பைன்டர் அவுட் ஆகும் பொழுது அவர்கள் அணியின் ஸ்கோர் 611 ரன்கள் காட்டியது.அது மட்டுமல்லாமல் தொடர்ந்தது சிறப்பாக ஆடினால் டெஸ்ட் மேட்சில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையும் உண்டாக்கியது.கேப்டன் ஹம்மோன்ட் 5 வதாக 650 ரன்கள் இருக்கும் பொழுது 140 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

நேரம் நகர்ந்துக் கொண்டிருந்தது.டெஸ்ட் மேட்ச்சில் எதிர் பாராத திருப்பம் முடிவிற்கு வழி வகுத்தது.இங்கிலாந்து அணி ரயில் மூலமாக இரண்டு நாட்கள் பயணம் செய்து பிறகு கடல் மார்கமாக தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயத்தால் டெஸ்ட் மேட்ச் டிரா என்ற முடிவிற்கு வந்தது.

இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 654 / 5,10 நாட்கள் நடைப் பெற்ற இந்த டெஸ்டில் ஆட்டம் 46 மணி நேரம் நடைப் பெற்றது.

மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 14 ஆம் தேதி 1939 வரையில் நடைப் பெற்று கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தில் இடம் பெற்றது இந்த டெஸ்ட் மேட்ச்.

​​​​​​6 சதங்கள் ( ஒரு இரட்டைசதம்.) மிஸ் ஆன சதம்1.

தென் ஆப்பிரிக்க அணி 1011, இங்கிலாந்து 970 ரன்கள் எடுத்தனர்.5463 பந்துக்கள் வீசப்பட்டன.அந்த கால கட்டத்தில் ஒரு ஓவருக்கு 8 பந்துக்கள் வீசப்பட்டன.இந்த டெஸ்ட் மேட்ச் போதிய நேரம் இல்லாத காரணத்தால் முடிக்கும் தருணத்தில் 5 விக்கெடுக்கள் கை வசம் இருந்த இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 42 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இதையும் படியுங்கள்:
நான்கு ஓப்பனர்களும் சதம்! 148 கால கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த 2 'அதிசய' டெஸ்ட் போட்டிகள்!
Timeless Test Match in history ever

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com