கே.எல்.ராகுலை கடுமையாக விமர்சித்த லக்னோ அணி உரிமையாளர்!

Kl Rahul with Sanjiv Goenka
Kl Rahul with Sanjiv Goenka
Published on

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் விளையாடிய கே.எல்.ராகுல் இந்த முறை விடுவிக்கப்பட்டதையடுத்து லக்னோ அணியின் உரிமையாளர் ராகுல் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

கடந்த ஐபிஎல் தொடரில்கூட அவர் அணி தோல்வியடைந்ததும், அணியின் ஓனர் அவரை அனைவர் முன்னிலையிலும் கடுமையாக பேசினார். அப்போது ட்ரோல் செய்தவர்கள்கூட ராகுலின் நிலைக்குப் பரிதாபப்பட்டனர். அந்த அளவுக்கு மோசமான சூழ்நிலைகளை எதிர்க்கொண்டார்.

கடந்த சில காலங்களாக ஃபார்ம் அவுட்டிலிருந்த கே.எல்.ராகுல், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பேக் அப் தொடக்க வீரர், பேக் அப் விக்கெட் கீப்பர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்று எந்த ரோல் கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர்.

ஆனால் அவருக்கு சில காலங்களாகவே போதாத காலமாக உள்ளது. ஐபிஎல் தொடரில் நடந்த சம்பவத்தால் ரசிகர்களின் அன்பைப் பெற்றார். அதாவது பலரும் கே.எல்.ராகுலுக்கு ஆறுதலாக பதிவிட்டனர். உரிமையாளரை கண்டித்தும் பதிவிட்டனர். மேலும் சிலர் கே.எல்.ராகுல் அந்த அணியைவிட்டு விலகுவதுதான் சரி, அடுத்த ஆண்டு அந்த அணிக்காக விளையாடக்கூடாது என்றெல்லாம் பதிவிட்டனர்.

அதேபோல் இந்தமுறை லக்னோ அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா பேசியதாவது, “அணி வெற்றி பெறுவதற்கான மனநிலை வேண்டும். தனிப்பட்ட சாதனைகளை தவிர்த்துவிட்டு அணிக்காக விளையாடும் வீரர்கள் தேவை. தங்களது தனிப்பட்ட இலக்குகள் மற்றும் தனிப்பட்ட சாதனைகளுக்கு முன்பு, அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட வீரர்கள் தான் எங்களுக்கு தேவை. ஜாகீர் கான், ஜஸ்டின் லாங்கர் மற்றும் அணியின் உதவியாளர்கள் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். நிக்கோலஸ் பூரனின் சீரான பேட்டிங் திறமையால் அவர் முதல் வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளார். ஆயுஷ் படோனி மற்றும் மொஹ்சின் கான் ஆகியோரும் எங்களுக்கு முக்கியமானவர்களாக இருந்தனர்."

இதையும் படியுங்கள்:
என்னை விட மற்றவர்களுக்கு சம்பளம் அதிகம்… ஆனால்!! - ரோஹித் ஷர்மா!
Kl Rahul with Sanjiv Goenka

கே.எல்.ராகுலை மறைமுகமாக இப்படி விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2022ம் ஆண்டு ஏலத்தில் ராகுலை அணியில் எடுத்தது லக்னோ அணி. அதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக லக்னோ அணிக்காக ராகுல் விளையாடி வந்தார். இந்தநிலையில் தற்போது கே.எல்.ராகுலுக்கு பதிலாக நிக்கோலஸ் பூரன், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், ஆயுஷ் படோனி மற்றும் மொஹ்சின் கான் ஆகியோரைத் தக்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com