ஹீல்ஸ் அணிந்து 100 மீட்டர் ஓடி உலக சாதனையை முறியடித்த மனிதர்!

ஹீல்ஸ் அணிந்து 100 மீட்டர் ஓடி உலக சாதனையை முறியடித்த மனிதர்!

ஹை ஹீல்ஸ் செருப்புகளில் 100 மீட்டர் வேகமாக ஓடியவர் என்ற உலக சாதனையை ஸ்பெயினைச் சேர்ந்த ஒருவர் முறியடித்துள்ளார். அவர் உசைன் போல்ட்டின் 100 மீட்டர் ஸ்பிரிண்ட் உலக சாதனையை விட 3.24 வினாடிகள் குறைவாகக் கடந்து இதை படைத்துள்ளார்.

குதிகால் நடைப்பயிற்சி என்பது நம்மில் பலருக்கும் மிகவும் சவாலாகவே இருக்கும். ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் எங்கே நாம் கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயம் நமக்குள் வந்துபோகும். ஆனால், இதைப்பற்றி கவலைப்படாமல், ஹை ஹீல்ஸ் அணிந்தபடி அசாதாரணமாக ஓடி உலக சாதனையையும் முறியடித்துள்ளார்.

ஸ்பெயினைச் சேர்ந்த 34 வயதான கிறிஸ்டியன் ராபர்டோ லோபஸ் ரோட்ரிக்ஸ் என்பவர், ஹை ஹீல்ஸ் அணிந்து 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12.82 வினாடிகளில் கடந்து இந்த உலக சாதனையை முறியடித்தார்.

ஹை ஹீல்ஸ் அணிந்தபடி ஆண்களில் அதிவேகமாக 100 மீட்டர் ஓட்டத்தில் இதற்கு முன்னதாக, ஜெர்மனியைச் சேர்ந்த ஆன்ட்ரூ ஆர்டோல்ஃப் என்பவர் 2019ம் ஆண்டில் 14.02 வினாடிகளில் கடந்து சாதனையை படைத்திருந்தார். இந்நிலையில், தற்போது கிறிஸ்டியன் ராபர்டோ லோபஸ் ரோட்ரிக்ஸ் 12.82 வினாடிகளில் கடந்து இந்த உலக சாதனையை முறியடித்துள்ளார்.

இவர், உசைன் போல்ட்டின் 100 மீட்டர் ஸ்பிரிண்ட் உலக சாதனையை விட 3.24 வினாடிகள் மட்டுமே கூடுதல் நேரமெடுத்து கடந்துள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com