

டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கப்பட்டு விரைவில் 150 ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான முதல் தரக் கிரிக்கெட் (First-class Cricket) போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஒரு இன்னிங்ஸில் ஒரு அணியே 300 ரன்கள் எடுப்பது சவாலாக இருக்கும் சூழலில், தனி ஒரு வீரராக 400 ரன்களுக்கு மேல் குவித்துச் சாதனை படைத்த 7 நிகழ்வுகளை இங்கே காண்போம்.
பல ஆட்டங்களில் அணி வீரர்கள் சேர்ந்து 300 ரன்கள் எடுப்பது சுலபம் இல்லாத தருணத்தில் தனி நபர் 400 ரன்களுக்கு மேல் ஒரு இனிங்க்சில் குவிப்பது தனி சாதனையாகவே பார்க்கப்படுகின்றது.
முதல் முதலில் முதல் தர ஆட்டத்தில் இத்தகையை சாதனை புரிந்தவர் இங்கிலாந்தின் லங்ஷய்யர் அணி கேப்டன் ஆர்ச்சி மக்லாரேன். வருடம் 1895.
இரண்டு முறை 400 ரன்கள் எடுத்த பெருமை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா வீரர் பில் போன்ச்போர்ட்டை சாரும்.
அதிக பட்சமான 501* ரன்கள் குவித்தவர் மேற்கு இந்திய தீவுக்கள் வீரர் பிரைன் லாரா. 1994-ல்
1. ஆர்ச்சி மக்லாரன் (1895) - 424 ரன்கள்
லங்ஷய்யர் மற்றும் சோமேர்ஸ்ட் அணிகள் சந்தித்தன கவுண்ட்டி சம்பியான்ஷிப் மேட்சில்.முதலில் பேட்டிங் விளையாடிய லங்ஷய்யர் அணி ரன்கள் குவித்த வண்ணம் இருந்தனர். அதில் முக்கிய பங்கு கேப்டன் மற்றும் துவக்க வீரர் ஆர்ச்சி
மக்லாரேன் அவர்களது.அணியின் 801 ரன்களில் இவர் எடுத்த ரன்கள் 424. இதில் 62 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கும்.
177 ரன்கள் எடுத்த அர்த்தூர் பால்வுடன் ஆர்ச்சி மக்லாரேன் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த ரன்கள் 363. எதிராணி சோமேர்ஸ்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் எடுத்த ரன்கள் 143 மற்றும் 206.
ஆர்ச்சி மக்லாரேன் அதிரடியால் லங்காஷயர் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 452 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2. பில் போன்ஸ்ஃபோர்டு (1923) - 429 ரன்கள்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் டாஸ்மேனியா மற்றும் விக்டோரியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில்,முதலில் பேட்டிங் ஆடிய டாஸ்மானியா அணி 217 ரன்களில் ஆல் அவுட் ஆகி விட்டது.
தொடர்ந்து ஆடிய விக்டோரியா அணி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ரன்களை குவித்தனர்.அவர்கள் ஒரு வழியாக ஆல் அவுட் ஆன தருணத்தில் அவர்கள் எடுத்திருந்த மொத்த ரன்கள் அதிர வைத்தது. ஆம். அவர்கள் ஸ்கோர் 1059 ரன்கள்.
முக்கிய காரணம் விக்டோரியா அணியின் கேப்டன் பில் போன்ச்போர்ட் ஆகும்.விக்டோரியா அணி கேப்டன் பில் போன்ஸ்ஃபோர்டு 42 பவுண்டரிகளின் உதவியுடன் 429 ரன்கள் எடுத்தார்.அணிக்கு ரன்கள் குவிக்க உதவிய விக்கெட் கீப்பர் ஹம்மி லவ் எடுத்த ரன்கள் 156.
இரண்டாவது இன்னிங்க்சில் டாஸ்மானியா அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. விக்டோரியா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 666 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
3. பில் போன்ஸ்ஃபோர்டு (1927) - 437 ரன்கள்
மெல்போர்னே மைதானத்தில் நடைபெற்றது இந்த முதல் தர ஆட்டம் ஷெஃபீல்ட் ஷீல்ட் மேட்ச் குயின்ஸ்லாந்து அணிக்கும் விக்டோரியா அணிக்கும் இடையில்.
முதலில் பேட்டிங் ஆடியது விக்டோரியா அணி துவக்க வீரர்களாக களம் இறங்கியவர்கள் அணியின் கேப்டன் பில் வுட்புல் மற்றும் பில் போன்ச்போர்ட். கேப்டன் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில் பில் போன்ச்போர்ட் சதங்கள் குவிக்க தொடங்கினார்.
அவர் 8வதாக அவுட் ஆகும் பொழுது அணியின் ஸ்கோர் 792. விக்டோரியா அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 793
பில் போன்ச்போர்ட் எடுத்த ரன்கள் 437. இதில் 42 பவுண்டரிகள் அடங்கும்.
129 ரன்கள் எடுத்த வீரர் ஸ்டோர்க் ஹென்றியுடன் சேர்ந்து போன்ச்போர்ட் குவித்த ரன்கள் 314. குயின்ஸ்லாந்து அணி 9 பவுலர்களை பயன்படுத்தினர். அந்த அணியின் பவுலர் கார்டன் ஆமோஸ் 148 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுக்கள் எடுத்தார்.
முதல் இன்னிங்க்சில் 189 ரன்கள் எடுத்த குயின்ஸ்லாந்து அணி பால்லோவ் ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பேட்டிங் ஆடியது.சிசில் தாம்சன் 118 ரன்கள் எடுக்க குயின்ஸ்லாந்து அணி 407 ரன்கள் குவித்தனர்.
முதல் இன்னிங்சில் டான் ப்ளாக்கி 6 மற்றும் இரண்டாவது இன்னிங்சில் பெர்ட் ஐரன்மொங்கர் 5 விக்கெட்டுக்களும் விக்டோரியா அணி சார்ப்பாக பந்து வீசி பெற்றனர்.ஒரு இன்னிங்ஸ் 197 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக 400 ரன்களுக்கு மேல் குவித்து சாதித்த பில் போன்ச்போர்ட்டின் விக்டோரியா அணி வென்றது.
இரண்டு முறை 400 ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமை பில் போன்ஸ்ஃபோர்டு அவர்களையே சாரும்.
4. டான் பிராட்மன் (1930) - 452 ரன்கள்*
சிட்னி மைதானத்தில் நடைப்பெற்ற ஷெஃபீல்ட் ஷீல்ட் மேட்ச். அணிகள் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து.
முதல் இன்னிங்சில் நியூ சவுத் வேல்ஸ் அணி எடுத்த ரன்கள் 235.துவக்க வீரராக ஆடிய பிராட்மன் எடுத்தது 3 ரன்கள்.
227 ரன்களுக்கு குயின்ஸ்லாந்து அணி ஆல் அவுட். யாரும் எதிர் பார்க்காத வண்ணம் டான் பிராட்மன் இரண்டாவது இன்னிங்சில் தனது அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டார். மொத்தம் 4 சதங்களுக்கு மேல் ரன்கள் குவித்தார். இவர் எடுத்த 452 * நாட் அவுட் ரன்கள் குவிக்க இவர் எதிர் கொண்ட பந்துக்கள் 465 மட்டும்.ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 49 பவுண்டரிகள் விளாசினார்.
400 ரன்கள் குவிக்க எடுத்துக் கொண்ட நேரம் 377 நிமிடங்கள். கேப்டன் அலன் கிப்பாஸ் (115 ரன்கள்) சேர்ந்து 272 ரன்கள் அணிக்கு சேர்த்தார்.நியூ சவுத் வேல்ஸ் அணி ஸ்கோர் 761/8 டிக்ளர்.
குயின்ஸ்லாந்து வீரர் அலெக் ஹுர்வுட் 179 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்சில் குயின்ஸ்லாந்து அணி 84 ரன்களில் சுருண்டது.நியூ சவுத் வேல்ஸ் பவுலர் சாம் எவரேட் 23 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுக்கள் எடுத்தார்.685 ரன்கள் வித்தியாசத்தில் குயின்ஸ்லாந்து அணி தோல்வியை தழுவியது.
இந்த ஆட்டத்தில் டான் பிராட்மன் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றி பெற செய்து முத்திரை பதித்தார்.
5. பி.பி. நிம்பால்கர் (1948) - 443 ரன்கள்*
இந்தியாவின் ரஞ்சி கோப்பை வரலாற்றில் கதியவார் மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தச் சாதனை நிகழ்ந்தது.
முதலில் பேட்டிங் ஆடிய கதியவர் அணி ஆல் அவுட் 238 ரன்களுக்கு. மேட்ச் முடியும் வரையில் தொடர்ந்து பேட்டிங் விளையாடியது மகாராஷ்டிரா அணி.மேட்ச் முடிவில் மகாராஷ்டிரா அணி ஸ்கோர் 826 / 4.
மகாராஷ்டிரா வீரர் பி.பி. நிம்பால்கர் 49 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 443 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பி பி நிம்பால்கர் 443* நாட் அவுட்.
கமல் பாண்டர்கர் 205 ரன்கள் எடுத்தார். ( 24, பவுண்டரி கள் )
ஷாராட் தியோதர் 93 ரன்கள்.
பி பி நிம்பால்கர் , கமல் பாண்டர்கர் ஜோடி 455 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தனர்.
443 ரன்கள் எடுத்த பி பி நிம்பால்கர் அடித்தது 1 சிக்ஸர் 49 பவுண்டரிகள்.
கதியவர் அணியில் விக்கெட் கீப்பர் தவிர 10 வீரர்களும் பவுலிங் செய்தனர். மேட்ச் டிராவில் முடிந்தது.
6. ஹனிப் முகமது (1959) - 499 ரன்கள்
பாகிஸ்தானில் குவாய்ட் - இ - அசாம் கோப்பை. பஹவால்பூர் மற்றும் காரச்சி அணிகள் பங்கு பெற்றன.முதலில் பேட்டிங் ஆடிய. பஹவால்பூர் அணி 185 ரன்கள் எடுத்தது.அடுத்த ஆடிய காரச்சி அணியில் இரண்டு சதங்கள் எடுக்கப் பட்டு 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 772 ரன்களுடன் டிக்ளர் செய்தது.
அந்த இரண்டு சதங்களில் சரித்திரம் படைக்கப் பட்ட 499 ரன்கள் எடுத்த வீரரின் சாதனையும் அடங்கும். 64 பவுண்டரிகள் எல்லை கோட்டை கடந்தன.
இந்த ரன்களில்.இந்த சாதனை நாயகன் ஒப்பனிங் பேட்ஸ்மேன் ஹனிப் முஹம்மது.இவர் ரன் அவுட் முறையில் அவுட் ஆனார்.
இவரது இந்த 499 ரன்கள் தனி வீரரின் அதிக பட்ச ரன்களாக தொடர்ந்து 35 வருடங்கள் முதலிடத்தில் இருந்தது.
இந்த ஆட்டத்தில் சதம் எடுத்த அடுத்த வீரர் வால்லீஸ் மதியாஸ் 103ரன்கள்.
இரண்டாவது இன்னிங்சில் 108 ரன்களுக்கு பஹவால்பூர் அணி ஆல் அவுட் ஆயிற்று.ஒரு இன்னிங்ஸ் 479 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி அணி வெற்றியை பதிவு செய்தது.
7. பிரையன் லாரா (1994) - 501 ரன்கள்*
இங்கிலாந்தில் பிரிட்டியானிக் அஷ்யூரன்ஸ் கவுண்ட்டி சாம்பியன்ஸ்.துர்ஹாம்,வார்விக்க்ஷையர் அணிகள்.
முதலில் பேட்டிங் ஆடிய. துர்ஹாம் அணி வீரர்கள் ரன்கள் குவிக்க தொடங்கினர்.
ஜான் மொரிஸ் என்பவர் 204 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களும் தங்கள் பங்களிப்பை கொடுத்தனர். அந்த அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 556 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தனர்.
தொடர்ந்து ஆடிய வார்விக்க்ஷையர் அணி தங்கள் பங்கிற்கு ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட் விழுந்ததும் ஆட வந்த பிரைன் லாரா ஆட்டத்தின் போக்கை தன் வசம் வைத்துக் கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத்தினார்.சிக்ஸர்களை பறக்க விட்டார் எல்லா திக்குகளிலும்.பவுண்டரிகள் எல்லைக் கோட்டை கடந்த வண்ணம் இருந்தன. அடுத்து அடுத்து சதங்கள் சென்ற வண்ணம் இருந்தது. மேட்ச் முடிவில் நாட் அவுட்டில் இருந்த பிரைன் லாராவின் ரன்கள் 501*.(10 சிக்ஸர்கள், 62 பவுண்டரிகள்)
427 பந்துக்கள் மட்டும் எதிர் கொண்டு இந்த ஐந்து சதம் சாதனை புரிந்தார். இவருடன் ஜோடி சேர்ந்து லாரா பார்ட்னர்ஷிப்பில் அணிக்கு அதிகரித்த ரன்கள் 322.
வார்விக்க்ஷையர் அணி 810 / 4 டிக்ளர் என்று முடித்துக் கொண்டது.ஆட்டம் டிராவில் முடிந்தது.
முதல் தரக் கிரிக்கெட் வரலாற்றில் இன்றுவரை முறியடிக்கப்படாத உச்சகட்ட சாதனை இதுவே. வார்விக்ஷயர் அணிக்காக விளையாடிய பிரையன் லாரா, டர்ஹாம் அணிக்கு எதிராக வெறும் 427 பந்துகளில் 501 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10 சிக்ஸர்கள் மற்றும் 62 பவுண்டரிகள் அடங்கும். டெஸ்ட் போட்டியில் 400* மற்றும் முதல் தரப் போட்டியில் 501* என இரண்டு உயரிய சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ளார் லாரா.