கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி படைத்த மோசமான சாதனை!

Indian team
Indian team
Published on

சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வரும் சமயத்தில் ஒரு மோசமான சாதனையையும் படைத்திருக்கிறது. அது என்னவென்று பார்ப்போமா?

சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணி ஏ பிரிவில் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன்னர் வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் தோற்கடித்துவிட்டது.

இந்தநிலையில் நியூசிலாந்து அணியுடன் மோதிய ஆட்டத்தில், இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றது. அதாவது இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறி எதிரணி 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.    வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்களை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இதனையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் மோதவுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி நான்கு சுழற்பந்துவீச்சாளர்களை களம் இறக்கி அழுத்தத்தை கொடுக்க உள்ளது. ஏனெனில், துபாய் மைதானத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதை அறிந்து இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்திய அணியில் ஐந்து சுழற்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து உள்ளார்.

இந்திய அணி வெற்றி நோக்கி முயற்சித்து வரும் நிலையில், ஒரு மோசமான சாதனை குறித்தான செய்திகள் பரவி வருகின்றன.

நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது போட்டியை பார்த்த அனைவருக்குமே தெரியும். இந்திய அணி நேற்று மட்டும் டாஸ் லாஸ் பண்ணவில்லை. கிட்டத்தட்ட தொடர்ந்து 13வது முறையாக டாஸில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக அதிக டாஸ் தோற்ற அணி என்ற மோசமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

அதேபோல் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் டாஸ் லாஸ் செய்தது 10வது முறை. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக டாஸ் தோல்விகளை சந்தித்த 3-வது கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
வெயில் வருது... வெயில் வருது... உஷாராகுங்கோ!
Indian team

முதல் இடத்தில் பிரையன் லாரா தொடர்ந்து 12 முறை டாஸில் தோல்வியை சந்தித்திருக்கிறார். பீட்டர் போரேன் 11 முறை கேப்டனாக டாஸ் லாஸ் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com