The 100
The 100

தி 100 தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இல்லை… என்ன காரணம்?

Published on

தி ஹண்ட்ரட் தொடரில் எந்த பாகிஸ்தான் வீரர்களும் வாங்கப்படாதது பேசும்பொருளாக மாறியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகெங்கிலும் பொதுவாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய தொடர்கள் விளையாடப்பட்டு வருகின்றன. இதேபோல், ஒவ்வொரு நாட்டிலும் அவர்களுக்கென்று புதுபுது ஃபார்மெட் வைத்திருப்பார்கள். இப்படித்தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு தொடரை நடத்தி வருகிறது. அதாவது 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் புதிய முறையிலான தொடரை இங்கிலாந்து 2021 ஆம் ஆண்டு முதல் நடத்திக் கொண்டு வருகிறது.

இந்த தொடரில் எப்போதும் இந்திய வீரர்கள் மற்றும் பங்கேற்பதில்லை. மற்ற அனைத்து நாடுகளும் பங்கேற்று வருகின்றன. இந்தத் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டிற்கான தி ஹண்ட்ரட் தொடரின் மெகா ஏலம் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் உட்பட சுமார் 50 பாகிஸ்தான் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்தனர். ஆனால், ஒருவர் கூட வாங்கப்படவில்லை. இப்போது தரமான ஃபார்மில் இருக்கும் சையும் அயுப் கூட வாங்கப்படவில்லை.

ஆனால், கடந்த ஆண்டு இந்த தொடரில் 6 பாகிஸ்தான் வீரர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகையால், இதற்கு ஒரு புரளி எழுந்தது. அதாவது இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் நான்கு அணிகளை இந்திய முதலாளிகள் வாங்கியிருக்கின்றனர். இதனால்தான் பாகிஸ்தான் வீரர்கள் வாங்கப்படவில்லை என்ற செய்திகள் வந்தன. ஆனால், இதற்கு அது காரணம் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கான உண்மை காரணமும் வெளியாகியிருக்கிறது.

அதாவது பாகிஸ்தான் அணி ஜூலை கடைசியில் இருந்து ஆகஸ்ட் முதல் வாரங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் விளையாடுகிறது. இது செப்டம்பர் மாதம் டி20 வடிவத்தில் நடக்க இருக்கும் ஆசிய கோப்பைக்கு தயாராக மிக முக்கியமான தொடர்களாக இருக்கும்.

இதனால், பாகிஸ்தான் வீரர்கள் தொடர் முழுவதும் பங்கேற்பார்களா என்பது சந்தேகம்தான். இதனை கருத்தில்கொண்டுதான் அவர்களை வாங்கவில்லையாம்.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் குறியீடு பெற்ற உலகின் ஒரே மரம் எங்கிருக்கிறது தெரியுமா?
The 100
logo
Kalki Online
kalkionline.com