ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை! இது தோனிக்கு கைகொடுக்குமா? கவலையில் ரசிகர்கள்!

ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை! இது தோனிக்கு கைகொடுக்குமா? கவலையில் ரசிகர்கள்!
Updated on

ரிசர்வ் டே நாளில் இன்றயை இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் நடைபெறும் நிலையில், இப்போட்டி தோனிக்கு வெற்றியை பெற்றுத்தருமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தல தோனி என்றால், மைதானமே அதிரும் என்பதை பல ஐபிஎல் போட்டிகளில் நாம் கண்டுகளித்திருப்போம். இவரது தலைமையில், ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, பார்டர் கவாஸ்கர் டிராபி, ஆசிய கோப்பை, ஐபிஎல் கோப்பை என பல கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது.

எப்படி ஒருகாலத்தில் சச்சின் இருந்தால் போட்டியில் இந்திய அணி வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்ததோ, அதே அளவுக்கு தோனி மைதானத்தில் இருந்தால் அதே நம்பிக்கை கடைசி வரைக்கும் நிலைக்கும். அந்தளவுக்கு கூலாக விளையாடக்கூடிய மனிதர்.

இவர் ஏற்கெனவே ஒருநாள், டெஸ்ட் போட்டி என கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். இவரது தலைமையில், இன்று சென்னை அணி குஜராத் அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது. அதிலும் நேற்று நடக்கவேண்டிய இந்த போட்டியானது, மழை குறுக்கிட்டதால், ரிசர்வ் டே விதிப்படி இன்று இப்போட்டி நடைபெறுகிறது.

16 வருட ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக இப்போதுதான் இறுதிப்போட்டி இவ்வாறு மழையால் பாதிக்கப்பட்டு, ரிசர்வ் நாளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டியானது இன்று நடக்கும் என ரசிகர்கள் ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும், மறுபுறம், ரசிகர்கள் சற்று கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.

தல தோனி ஏற்கெனவே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஐபிஎல்-லில் விளையாடி வருகிறார். இந்த சீசன்தான் தோனி விளையாடும் கடைசி சீசன். அடுத்த ஐபிஎல்-லில் விளையாடமாட்டார் என பலரும் கூறிவருகின்றனர். மற்றவர்கள் கூறினாலும், அவர் இன்னும் தனது ஓய்வு பற்றி கூறவில்லை.

எது எப்படி இருந்தாலும், தல தோனியை மகிழ்ச்சியாக வழியனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணமும் ரசிகர்களின் நிறைவேறாத ஆசையாகவும் இருந்துவருகிறது.

காரணம், 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில் அப்போது மழை குறுக்கிட்டது. அதனால் அந்த போட்டியும் ரிசர்வ் டே-வுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, போட்டி அடுத்த நாள் நடைபெற்ற நிலையில், அப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதோடு, தோனி விளையாடிய கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாகவும் அப்போட்டி அமைந்தது. அதனால் தோனிக்கு மகிழ்ச்சியான தருணமாக அது அமையவில்லை.

அதேபோல்தான் தற்போது ஐபிஎல்-லின் இறுதிப் போட்டியும் ரிசர்வ் டே-வுக்கு மாற்றப்பட்டு இன்று நடைபெற உள்ளது. அதனால் இந்த போட்டி தோனிக்கு ராசியாக அமையுமா? அமையாதா? என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஒருநாள் போட்டியில் இருந்து அவர் ஓய்வுபெறும்போது, அவரை மகிழ்ச்சியாக வழியனுப்பவில்லையென்றாலும், இந்த போட்டியிலாவது வீரர்கள் அனைரும் சேர்ந்து அணியை வெற்றி பெறச் செய்து, தோனிக்கு ஒரு மகிழ்ச்சியான தருணத்தை அமைத்துக் கொடுக்கவேண்டும்? என ரசிகர்களும் எண்ணி வருகின்றனர்.

அதே சமயம், இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுவதால், இன்றைய போட்டியின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com