உலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இதுதான்!

உலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இதுதான்!

1844ம் ஆண்டு, செப்டம்பர் 24 முதல் 26 அன்று, அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. 23 ரன்கள் வித்தியாசத்தில் கனடா அணி வெற்றி பெற்றது. ஆனால் இந்த போட்டிக்கு, முதல் டெஸ்ட் போட்டி என்ற தகுதி அளிக்கப்படவில்லை.

அதற்குப் பிறகு, 1877ம் ஆண்டு March 15-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டி தான், முதல் அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

அதுவும், 1877, March 15-ல் இந்த இரு அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றாலும், இந்த டெஸ்ட் மேட்ச் தகுதியானது, அந்த குறிப்பிட்ட போட்டி முடிவடைந்து சில காலத்திற்கு பிறகுதான் வழங்கப்பட்டது.

இப்படியும் ஒரு வினோத ஃபீல்டிங்கா!

கிரிக்கெட்டில் வினோத முறையில் பீல்ட் செய்ய ஆட்டக்காரர்களை நிற்க வைப்பது வழக்கம். இங்கிலாந்து அணிக்கு எதிராக, 1975 ஆம் ஆண்டு டெஸ்டில் ஆலன் நாட் (Alan Knott) பேட்டிங் செய்யும் பொழுது, பந்துவீச்சாளரான ஜெஃப் தாம்சன் ( Jeff Thomson), 6 ஸ்லிப் ஃபீல்டர்களை (Six Slip fielders) நிற்க வைத்து பந்து வீசினார்.

பந்து வீச்சாளரான டென்னிஸ் லில்லி (Dennis Lilie) 1976-77 டெஸ்ட் ஒன்றில், நியூசிலாந்து அணிக்கு எதிராக கடைசி ஆட்டக்காரர் பீட்டர் பெதெரிக் (Peter Petherick) என்பவருக்கு பந்து வீசும்பொழுது ஆஸ்திரேலிய அணி கேப்டன் சாப்பெல் (Chappell) 9 ஸ்லிப் ஃபீல்டர்களை (Nine Slip fielders) நிறுத்தினார்.

இவ்வகையாக ஃபீல்டிங்கில் நிறுத்தும் முறையை அம்ப்ரெல்லா பீல்ட் (Umbrella Field) என்று அழைப்பார்கள். 

1940களில் முதன்முதலில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales)-ஐச் சேர்ந்த கீத் கார்மோடி (Keith Carmody) என்பவரால்தான் இந்த முறை வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இப்பொழுதும் இந்த முறை தேவைப்பட்டால் உபயோகப்படுத்தப் படுகின்றது.

டார்கெட்டை அடைந்த முரளிதரன்!

ஸ்ரீலங்கா அணியின் சூழல் பந்து வீச்சாளார் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஒய்வு பெறப் போவதாக அறிவித்த சமயம், தனது கடைசி டெஸ்ட் மேட்சை இந்திய அணிக்கு எதிராக விளையாடினார். அந்த சமயம் அவர் 792 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அதேசமயம் அவரது டார்கெட் 800 விக்கெட்டுகள் வீழ்த்திதான் ஓய்வுபெறவேண்டும் என்று எண்ணினார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் மாலிங்கா 5 விக்கெட்டுகள் எடுத்துவிட்டார். எப்படியாவது தனது டார்கெட்டை அடைவதற்காக, அயராமல் பந்து வீசிய முரளிதரன் இந்திய அணியின் கடைசி விக்கெட்டை கைப்பற்றி தனது 800 வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்து சாதனை புரிந்தார். 

5 ரன்னும், 6 ரன்னும்!

ஒரு கால கட்டத்தில் டெஸ்ட் மேட்சுகளில் 5 ரன்கள் அடிப்பது 6 ரன்கள் (சிக்ஸர்) எடுப்பது கடினமாகவே இருந்தது. பேட்ஸ்மேன் அடித்த பந்து பாட்டில் பட்டு தரையில் படாமல், தொடாமல் பவுண்டரி கோட்டிற்கு அப்பால் விழுந்தால் 5 ரன்கள் என்றும், மைதானத்துக்கு வெளியே விழுந்தால் 6 ரன்கள் என்றும் கருதப் பட்டன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com