ஞாபகத் திறனை அதிகரிக்க…

ஞாபகத் திறனை அதிகரிக்க…

ம் அனைவருக்கும் பொதுவான பிரச்சினை ஞாபகமறதி. இதற்கு காரணம் மூளை நரம்புகள் போதிய சக்தியின் மையால் சோர்வடைவதால்தான். மனித மூளையில் 100பில்லியன் நரம்புக்குள் உள்ளன. மூன்றில் ஒரு பகுதி தண்ணீரால் நிரம்பிய மூளைப்பகுதி, போதுமான தண்ணீர் உடலில் இல்லையென்றால் மூளையின் செயல்பாடு குறைந்து வறட்சி அடையும். இதனால் சின்ன சின்ன விஷயங்கள் கூட மறந்து போகும்.சமச்சீரான உணவு, உடற்பயிற்சி, கவனத்தை ஒருமுகப்படுத்துவது போன்ற இயற்கை வழிகள் மூலம் ஞாபக சக்தியை மேம்படுத்தலாம்.

ள்ளி திறந்து படிக்க ஆரம்பித்திருக்கும் பிள்ளைகளுக்கு, மனப்பாட சக்தியை சொல்லி வளர்ப்பதை விட, ஒரு விஷயத்தை புரிந்து படிக்கும் வழக்கத்தை பழக்கப்படுத்த வேண்டும்.கேள்வி கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் போது நல்ல முறையில் அவர்களின் நினைவுத்திறன் அதிகரிக்கும்.

தையும் எழுதி பார்க்கும்போது படிப்பது மறக்காது. கவனச்சிதறல் இல்லாமல் எதையும் உற்று நோக்கி, கவனித்து ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறனை அவர்களிடத்தில் வளர்த்து விட அவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி இருக்கிறது. இது ஞாபகத் திறனுக்கு துணைபுரியும்.

ல்லாரை பொடி தினமும் பாலில் கலந்து கொடுக்கலாம். உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்ய அவர்களின் மூளை செயல்திறன் அதிகரிக்கும்.

காலை உணவை தவிர்க்காமல் அவர்களுக்கு பிடித்த உணவை தயாரித்து சாப்பிட பழக்க வேண்டும். மூளையின் செயல் திறனை அதிகரிப்பது கோலைன். இது முட்டையில் அதிகமாக உள்ளது. தினமும் முட்டை சாப்பிடுவதால் ஞாபக சக்தி, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்புக்கள் உள்ளது. குளுட்டாமிக் அமிலம் நினைவாற்றலை அதிகரிக்கவும், நரம்புகளை பலப்படுத்தவும் உறுதுணையாக உள்ளது. பச்சைக்காய்கறிகள், பழங்கள் இவற்றை சிறுவயதிலேயே சாப்பிட பழக்கி விட்டால் உடலுக்கும், ஏனைய உறுப்புகளின் சிறப்பான செயல்திறனுக் கும் உதவி புரியும்.நன்றாக ஓடியாடி விளையாடுவது உடலுக்கும், மூளையின் செயல்பாட்டுக்கும் நன்மை பயக்கும்.

மூலிகைத் தேநீர்

உடலுக்கு புத்துணர்வும், மனதிற்கு மகிழ்ச்சியை யும்ஏற்படுத்தும் மூலிகை தேநீர். இதை தினமும் அருந்தி வந்தால் சுறுசுறுப்பைத் தருவதோடு, எளிய உடல் உபாதைகளை யும் போக்கும்.

எலுமிச்சை சாறு தேநீர்

தேயிலைத் தூள் போட்டு மிளகு சேர்த்து கொதிக்க விடவும்.பின் வடிகட்டி தேன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அருந்த தலைபாரம், மூக்கடைப்பு நீங்கும்.

பூக்கள் சேர்த்த தேநீர்

ல்லிகைப்பூ இதழ்கள்,ரோஜாக்கள், நந்தியாவட்டை இதழ்கள், தாமரைப்பூ இதழ்கள், செம்பருத்திப்பூ இதழ்கள் குங்குமப்பூ இவற்றை காய வைத்து பொடித்து, அப்பொடி,தேயிலைத் தூள் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேன் கலந்து அருந் த மலச்சிக்கல், உடல்சூடு,வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.நரம்பு தளர்ச்சி குணமாகும்.

மசாலா தேநீர்

சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை இவற்றின் பொடியுடன் இலவங்கப்பட்டை,தனியா, ஏலப்பொடி,தேயிலைத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து அருந்திட மஞ்சள் அல்சர், தலைவலி, வயிற்று வலி நீங்கும்.

புதினா தேநீர்

தேயிலைத் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஏலப்பொடி, புதினா இலைகளை சேர்த்து கலந்து பின் வடிகட்டி குடிக்க உடலுக்கு புத்துணர்வு, மனதிற்கு  மகிழ்ச்சியை அளிக்கிறது.

வெற்றிலை தேநீர்

வெற்றிலை, தேயிலைத் தூள் , ஏலப்பொடி, பனைவெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க தலைவலி, மயக்கம்,வாய் துர்நாற்றம்,நாவின் சுவையின்மை நீங்கும்.

துளசி தேநீர்

துளசி, தேயிலைத் தூள் சேர்த்து தனியா போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பின் வடிகட்டி குடிக்க பித்த தலைவலி, தொண்டைவலி போன்றவை குணமாகும்.

செம்பருத்தி தேநீர்

தேயிலைத் தூள், மிளகு, செம்பருத்தி இதழ், துளசி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க மனக்கவலை, இதயம் தொடர்பான நோய்கள் வராது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com