சர்வதேச கராத்தே போட்டி: தமிழக மாணவர்களுக்கு 12 தங்கப் பதக்கம்! 

சர்வதேச கராத்தே போட்டி: தமிழக மாணவர்களுக்கு 12 தங்கப் பதக்கம்! 
Published on

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் கலந்து கொண்டு 12 தங்கப் பதக்கம், 5 வெள்ளிப் பதக்கம், 5 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

மலேசியாவின் ஈப்போ நகரில் 18-வது சர்வதேச கராத்தே போட்டி கடந்த மே மாதம் 27ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டிலிருந்து ஆல் இந்தியா கராத்தே டோ கோஜு ரியு அசோசியேசன் சார்பில் 12 பேர் கலந்துகொண்டு 21 பிரிவுகளில் விளையாடி மொத்தம் 12 தங்கப் பதக்கம், 5 வெள்ளிப் பதக்கம், 5 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றிவாகை சூடி நேற்று (ஜூன் 1) சென்னை விமான நிலையம் வந்த இந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. இந்த வெற்றி குறித்து பயிற்சியாளர் சீனிவாசன் கூறியதாவது;

மலேசியாவில் கராத்தே போட்டி கடுமையாக இருந்தது ஆனாலும் மாணவர்கள் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். தமிழக அரசு உதவி செய்தால் அடுத்து வரும் காமன்வெல்த் ஆசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வார்கள். சிலம்பம் கலைக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்தது போல் கராத்தே கலைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவோம்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பதக்கங்களை வென்ற மாணவர்கள் கூறிம்போது '"எங்களில் நிறைய பேர் அரசு பள்ளிகளில் தான் படித்து வருகிறோம். கடினமாக உழைத்து கராத்தேயில் தங்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வெல்வோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தற்பாதுகாப்புக்காக  அனைவரும் கராத்தே பயில வேண்டும்'' என்றனர்..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com