தேசிய மாற்றுத் திறனாளிகள் கபடி போட்டி:  சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி!

தேசிய மாற்றுத் திறனாளிகள் கபடி போட்டி:  சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி!
Published on

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் 2 நாட்கள் நடந்த தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபடி போட்டியில் தமிழக அணி வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது. : இப்போட்டியில் தமிழக அணி 4-ம் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 

தேசிய அளவிலான 4 வது மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த கபடி போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்த்தான், பீகார், சத்தீஸ்கர், விதர்பா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 16 மாநில அணிகள் பங்கேற்றன

 கடந்த மாதம் 29-ம் தேதி கோப்பை மற்றும் வீரர்கள் அறிமுக விழா நடந்தது. இதனைத்தொடர்ந்து 30-ம் தேதி கபடி போட்டி தொடங்கி நடைபெற்றது

முதல் போட்டியில் தமிழ்நாடுகர்நாடக அணி வீரர்கள் களம் கண்டதில் தமிழ்நாடு அணி 33-20 புள்ளிகள் பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. பின்னர் ஜார்க்கண்ட் அணியுடன் மோதிய தமிழ்நாடு அணி 45-9 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் தெலுங்கானா அணியுடன் மோதிய தமிழக அணி 33-3 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய தமிழக அணி, மஹாராஷ்ட்ர அணியை 42-21 வென்று இறுதிச்சுற்றிக்கு தகுதி பெற்றது.

 அனல் பறக்க நடந்த இறுதி ஆட்டத்தில் ஆந்திராவை எதிர்கொண்டு தமிழக அணி 45-25 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்று கோப்பையை தன் வசமாக்கியது. அதையடுத்து இப்போடிகளில்  தமிழ்நாடு அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் தக்க வைத்துக்கொண்டது.

 தமிழக அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் தன்னை எதிர்த்து விளையாடிய அணிகளை அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தமிழக கபடி வீரர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்

 தமிழக மாற்றுத் திறனாளிகள் கபடி சங்க பொதுச்செயலாளரும்,தேசிய மாற்றுத்திறனாளிகள் கபடி கூட்டமைப்பின் துணைத்தலைவர் ரமேஷ் கண்ணன் மற்றும் அணி கேப்டன் மகேஸ் ஆகியோர் செய்தியாளர்கலீடம் தெரிவித்ததாவது: 

தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான  கபடி போட்டியில் தமிழ்க அணி 4-வது முறியாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக தமிழ்நாடு அணிக்காக விளையாடி கொண்டிருக்கக்கும் கபடி வீரர்களுக்கு இதுவரை அரசு சார்பில் எந்த ஒரு உதவித் தொகையோ, அரசு வேலை வாய்ப்போ கிடைக்கவில்லை, அதனால் இந்த வீரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசாங்க வேலை உறுதி செய்ய வேண்டும்.

 அதே போன்று வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்டம் தோறும் பயிற்சி ஆட்டம் விளையாடுவதற்கு மைதானங்கள் அமைத்து தரவும், மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்கவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com