வேட்டி கட்டி அசத்திய வெளிநாட்டு செஸ் வீரர்! 

வேட்டி கட்டி அசத்திய வெளிநாட்டு செஸ் வீரர்! 

-காயத்ரி. 

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள், அவர்களின் நாட்டு கலாச்சாரத்தை பிரபலிக்கும் வகையில் வண்ண வண்ண உடைகளுடன் செஸ் விளையாட தினசரி வருகின்றனர். 

குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த வீரர்கள் வித்தியாசமான சிகை அலங்காரம், உடைகளில் வலம் வருகின்றனர். அப்படி வித்தியாசமான ஆடையில் வலம் வந்தார் ஜிபுட்டி நாட்டை சேர்ந்த முகமது அலி. நம்ம ஊர் வேட்டியை கட்டி, பெல்ட் மூலம் இறுக்கிக் கட்டி கொண்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.  

''இது எங்கள் நாட்டின் பாரம்பரிய உடை. இந்த வேட்டிக்கு எங்கள் நாட்டில் 'மரத்தி' என்று பெயர்'' என்ற முகமது அலி, தங்கள் நாட்டு நடனத்தை ஆடிக்காட்டினார். தொடர்ந்து 'வணக்கம், வேட்டி கட்டிய தமிழன்' என தமிழில் பேசினார் முகமது அலி. 

செஸ் போட்டியாளர்கள் மட்டுமல்ல.. பார்வையாளர்களும்கூட வித்தியாசமான செஸ் ஸ்டைலில் அசத்தினர். காதில் செஸ் போர்டு மாதிரி கறுப்பு – வெள்ளைக் கட்டங்களுடன் கூடிய தொங்கட்டான் அணிந்து வந்த இளம்பெண் ஒருவர் அன்று ஹைலைட்!  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com