தேசிய நீச்சல் போட்டி: 7 பதக்கங்கள் வென்ற நடிகர் மாதவன் மகன் வேதாந்த்!

தேசிய நீச்சல் போட்டி: 7 பதக்கங்கள் வென்ற நடிகர் மாதவன் மகன் வேதாந்த்!

Published on

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் 7 பதக்கங்களை வென்று குவித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் 'சாக்லேட் பாய்' என்று அழைக்கப்படும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த். 16 வயதான இவர் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகள் படித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் லத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார். இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள பசவங்குடி நீச்சல் மையத்தில் தேசிய அளவிலான 47-வது ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா சார்பில் வேதாந்த் மாதவன் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று, 4 வெள்ளிப் பதக்கங்களையும், 3 வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதையடுத்து வேதாந்துக்கு பலதரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிகின்றன.

logo
Kalki Online
kalkionline.com