உடல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கும் திரிபலாப் பொடி!

ஆரோக்கியத்தகவல்
உடல் சார்ந்த  பிரச்சனைகளை தீர்க்கும் திரிபலாப் பொடி!
Published on

நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் இந்த மூன்றின் கலவையே திரிபலா. இதில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் இந்தப் பொடியை வாங்கி பயன்படுத்தலாம். அனைத்து வயதினருக்கும் ஏற்றது என்பது தான் இதிலுள்ள சிறப்பு.

சர்க்கரை எனப்படும் நீரிழிவு நோயாளிகளுக்கு கண்கண்ட மருந்து திரிபலா. இது கணையைத்தின் வேலையை சிறப்பாக்கி இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது. உடலில் குளுக்கோஸ் அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஒரு டம்ளர் நீரில் ஐந்துகிராம் திரிபலா சூரணத்தை கொதிக்க வைத்து கால் டம்ளர் அளவு சுண்டியதும் குடித்து வந்தால் நல்ல பலன் தரும்

செரிமானக் கோளாறுகளை சீர்படுத்தி, மலச்சிக்கல் தீரவும், குடல் சுத்திகரிப்பானாகவும் திரிபலா சிறப்பாக செயல்படுகிறது. குடல் நச்சுக்களை வெளியேற்றும் போது குடலில் இருக்கும் நாடாப்புழுக்கள், ஒட்டுண்ணிகள், பூச்சி தொற்றுகள் போன்றவற்றை வெளியேற்ற உதவுகிறது

உடல் பருமன் உள்ளவர்கள் தினமும் திரிபலாவை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் பெறலாம்.  உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களை இந்த மருந்து கட்டுப்படுத்துவதால், கொழுப்பின் அளவு குறைந்து, உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு ரத்த சோகை என்பது தேசியக் குறைபாடாக ஆகிவிட்டது. திரிபலா சூரணம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது. மேலும்  இது இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும். தோல் சம்மந்தப்பட்ட  நோய்களான தேமல், சொறி, சிரங்கு போன்றவற்றை விரைவில் குணப்படுத்துகிறது.

இது சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட உதவுகிறது. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றை சரி செய்கிறது.பல விதமான தலைவலி பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக திரிபலா சூரணம் பயன்படுகிறது.

திரிபலா உடலின் உள் உறுப்புகள் வரை சென்று செயலாற்றக்கூடியது. சாதாரண கிருமிதொற்று முதல் புற்றுநோய் செல்கள் வரை எதிர்த்து போராடக்கூடிய அளவுக்கு இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் எதிர்ப்புசக்தியை தருகிறது.

திரிபலாப் பொடியை சாப்பிடும் முறை;

குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தேனில் குழைத்தும், பெரியவர்கள் நீரில் கலந்தும் குடிக்க வேண்டும். தினமும் காலை இரவு என இரண்டு வேளையும் குடிக்கலாம்.

மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும். கோடை காலத்தில் திரிபலாப் பொடியை பச்சைத் தண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடனும், பனிக்காலங்களில் தேனுடனும்  திரிபலாப் பொடியை கலந்து சாப்பிட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com