இரண்டு நாட்கள் மெகா ஏலம்: எத்தனை வீரர்களுக்கு எத்தனை கோடி செலவு? தெரிந்துக்கொள்வோமா?

IPL Mega auction
IPL 2025 auction
Published on

அடுத்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் மொத்தம் 10 அணிகளும் எத்தனை கோடி செலவு செய்தனர்? எத்தனை வீரர்களை வாங்கினர்? போன்றவற்றைப் பார்ப்போம்.

அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில்தான் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு ஏற்ற வீரர்களை தக்கவைத்துக் கொண்டனர். 10 அணிகள் மொத்தம் 46 வீரர்களைத் தக்கவைத்தனர். இதனையடுத்து 182 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பிறகு ஏலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 14-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க  மொத்தம் 1574 வீரர்கள் பதிவு செய்தனர். இவர்களில்,   320 கேப்டு பிளேயர்கள், 1,224 அன்கேப் பிளேயர்கள், மற்றும் 30 அசோசியேட் நேஷன்ஸ் வீரர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் 1165 பேர் இந்திய வீரர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். மேலும், இதில் ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் கலந்துக் கொள்வதால் மெகா ஏலத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டு நாட்களாக சவுதி அரேபியா தலைநகர் ஜெட்டாவில் நடைபெற்றது.

இந்த இரண்டு நாட்களாக நடந்த மெகா ஏலம் 182 வீரர்களுக்காக கிட்டத்தட்ட 639.15 கோடியை 10 அணிகள் உரிமையாளர்கள் செலவிட்டு வாங்கியுள்ளனர். இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட்  ரூ.27 கோடி  என்.எஸ்.ஜி அணியால் வாங்கப்பட்டுள்ளார். இரண்டாவதாக ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. மூன்றாவதாக வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு கே.கே.ஆர் அணி வாங்கி உள்ளது. இந்த மூவர் மட்டும் தான் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர்கள்.

இதையும் படியுங்கள்:
2025-ல் திருமணம்: வீடு தேடத் தொடங்கிய நட்சத்திர ஜோடி!
IPL Mega auction

மேலும் 13 வயதுடைய மிகவும் இளம் வீரரான வைபப் சூரியவன்ஷியை ராஜஸ்தான் அணி வாங்கியது. சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திரா சாஹலை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. மேலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரை ரூ10.75 கோடிக்கு ஆர்.சி.பி அணி வாங்கியது.

மேலும் டேவிட் வார்னர், ஷர்துல் தாக்கூர், கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோவ், ப்ரித்வி ஷா ஆகியோர் விற்கப்படவில்லை என்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com