சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி சாத்விக் - சிராக் தங்கம் வென்று வரலாற்று சாதனை..!!

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
Satwiksairaj Rankireddy and Chirag Shetty
Satwiksairaj Rankireddy and Chirag Shettyimage credit-thehawk.in
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவின் ஃபஜார் அல்ஃபியான் - முகமது ஃபிக்ரி ஜோடியை இந்திய ஜோடி வீழ்த்தியது.

சுமார் 1 மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், இந்தோனேசியா ஜோடியை 18-21, 21-17, 21-16 என்ற கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் சிங்கப்பூர் ஓபன் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

30-ம்தேதி நடந்த போட்டியில் இந்த இணை 21-19, 21-18 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் கிம் வோன் ஹோ-சியோ சியூங் ஜே ஜோடிக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு தாய்லாந்து ஓபன் வெற்றிக்குப் பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த தங்களது டைட்டில் வறட்சிக்கு சாத்விக் - சிராக் ஜோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com