U19 கிரிக்கெட் தொடரில் இப்படி ஒரு ஆல்ரவுண்டராக... அதிரடி ஆட்டக்காரர் அர்ஷின்!

ARSHIN KULKARNI
ARSHIN KULKARNI

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அர்ஷின் குல்கர்னி ஒரு ஆல்ரவுண்டராக சிறப்பாக விளையாடியது இந்திய ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

துபாயில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. டிசம்பர் 17ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் தினமும் இரண்டு போட்டிகள் வெவ்வேறு மைதானங்களில் இந்திய நேரத்தில் காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

இந்நிலையில் நேற்று இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் துபாயில் உள்ள ஐசிசி அகடாமி மைதானத்தில் களமிறங்கினார்கள். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக ஜத்ரன் மற்றும் தராகில் ஓப்பனராக களமிறங்கினார்கள். இந்திய அணியின் லிம்பானி வீசிய பந்தில் தராகில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாகக் களமிறங்கிய சோஹில் 12 ரன்களிலேயே வெளியேறினார். பின்னர் சிறப்பாக விளையாடிய ஜித்ரன் 43 ரன்கள் எடுத்தப்பின் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி வீரர் லிம்பானி 10 ஓவர்களில் 3 வீக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் திவாரி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அர்ஷின் வெரும் 8 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இந்திய அணி சார்பாக ஆதர்ஷ் மற்றும் ருத்ர படேல் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இருவருமே 32 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் தான் அர்ஷின் களமிறங்கினார். அவருடன் இந்திய அணியின் கேப்டன் சஹரன் இணைந்து நிதானமான ஆட்டத்தையே இருவரும் வெளிப்படுத்தினார்கள். சஹரன் 20 ரன்களிலேயே ஆட்டமிழந்ததால் முஷீர் கான் களமிறங்கினார்.

அர்ஷின் மற்றும் முஷீர் சேர்ந்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். முஷீர் 53 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அர்ஷின் 4 பவுண்டரிஸ் உட்பட மொத்தம் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்த நிலையில் அர்ஷின் நிதானமாக விளையாடி இந்திய அணியை வெற்றியடையச் செய்தார். அர்ஷின் தனது சிறப்பான பந்துவீச்சால் மூன்று விக்கெட்டுகளைக் கொடுத்தார். அதேபோல் சிறப்பான பேட்டிங் மூலம் 72 ரன்கள் எடுத்து ஒரு கைதேர்ந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்தார்.

இந்திய அணியில் இதுபோன்ற ஆல்ரவுண்டர் என்றால் அது ஹார்திக் மற்றும் ஜடேஜா என்று கூறலாம். அந்த வரிசையில் அர்ஷின் சீக்கிரம் ஆடவருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வார் என்றே ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com