U19 உலக கோப்பை: முஷீர்கானின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி!

U19 World Cup.
U19 World Cup.
Published on

யு 19 உலக கோப்பை போட்டியில், நடப்புச் சாம்பியனான இந்தியா, முஷீர்கானின் அதிரடி ஆட்டத்தின் மூலம் நியூஸிலாந்தை 214 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி 81 ரன்களுக்கு சுருண்டது.

296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது நியூஸாந்து அணி. ஆனால் முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர்களான டாம் ஜோன்ஸ், ஸ்நேஹித் ரெட்டி இருவரும் ரன் ஏதும் எடுக்காமலேயே அவுட்டானார்கள். ஜேம்ஸ் நெல்சன் 10 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஆஸ்கர் ஜாக்ஸன் 38 பந்துகளை சந்தித்து 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸாக் கம்மிங் 16, தாம்சன் 12 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 28.1 ஓவர்களில் 81 ரன்களுக்கு நியூஸிலாந்து ஆட்டமிழந்தது. 

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ராஜ் லிம்பானி முதல் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். செளமி பாண்டே 10 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முஷீர்கான் தனது பங்குக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் சிறப்பாக விளையாடி 131 ரன்கள் எடுத்தார். திவாரி, அர்ஷின் குல்கர்னி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையும் படியுங்கள்:
பிப்ரவரி மாதத்திற்கு ஏற்பட்ட மன வருத்தம்! எதனால் தெரியுமா?
U19 World Cup.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் 52 ரன்கள் எடுத்தார். முஷீர்கான் அதிரடியாக ஆடி, நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகளை தொடர்ந்து பவுண்டரிக்கு அனுப்பி விளாசித் தள்ளினார். அவர் எடுத்த 131 ரன்களில் 13 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடங்கும். எதிரணியின் பந்துகளை நாலா பக்கமும் அடித்து விளையாடிய ஒரே பேட்ஸ்மென் முஷீர்கான்தான்.

இந்திய அணியின் கேப்டன் உதய் சாஹரன் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை. அவர் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com