அபராதம், சோஷியல் மீடியா ட்ரோல்ஸ்,அனைத்தையும் சிக்ஸர்களாக பறக்கவிட்ட 15 வயது குட்டி மான்ஸ்டர் வைபவ்!

11 பந்தில் 50 ரன், ஓடத் தெரியாத குட்டி மான்ஸ்டர்! தம்புள்ளேயில் இலங்கை பந்துவீச்சை அலறவிட்ட 15 வயது வைபவ் சூர்யவன்ஷி!
Vaibhav Suryavanshi
Vaibhav Man of the matchICC
Updated on

இலங்கையில் ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி, நேற்று தம்புள்ளே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணி சார்பில் முதலில் களம் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி(94) மிகச்சிறப்பாக ஒரு துவக்கத்தினை அளித்தார்.

அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் சராசரியான சுமாரான ஆட்டத்தினை வெளிப்படுத்தினாலும் கேப்டன் திலக் வர்மா 67 ரன்கள் குவித்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 377/9 ஸ்கோரை குவித்தது. இலங்கை அணியின் மாதுளன் 82 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து விரட்டலை ஆரம்பித்த இலங்கை அணியில் சமரவிக்ரமா 52 ரன்களும் வானுஜா சஹான் 62 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். ஆனாலும் 47.1 ஓவரில் 311 ரன்களை மட்டுமே குவித்து 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியை தழுவியது.

இந்த போட்டியின் ஹைலைட்டே வைபவ் சூர்யவன்ஷியின் இரக்கமற்ற அசுரத்தனமான ஆட்டம் தான். 15 வயது சிறுவன் 11 பந்துகளில் 50 ரன்களை அடிக்க இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் அலறல், தம்புள்ளே மைதானத்தின் வெளியில் வரை கேட்டது. இந்த அதிவேக சதம் ஏ அணிகள் போட்டியில் முதல் இடத்தில் இருக்கும்.

வைபவ் ஒவ்வொரு பந்தையும் வானவேடிக்கை விட , பார்வையாளர்கள் இலங்கை பந்து வீச்சாளர்களை அழ வைக்க வந்த குட்டி மான்ஸ்டர் என்று பேச தொடங்கிவிட்டனர். வெறும் 29 பந்துகளை மட்டுமே சந்தித்து,8 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகளை விளாசி 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வைபவ் ஓடி எடுத்தது வெறும் 6 ரன்கள் மட்டுமே. வைபவவிற்கு ஓடி ரன்கள் எடுப்பது எல்லாம் தெரியாது. ஆனால் , எதிரணியின் வீரர்களை ஓட ஓட பவுண்டரி லைனுக்கு விரட்ட மட்டும் தெரியும்.

இந்த போட்டிக்கு முன்னர் வைபவ்விற்கு மிகக் கடுமையான அழுத்தங்கள் சர்வதேச அளவிலிருந்து கிளம்பின. சிறுவயதிலேயே தனது அதிரடி பேட்டிங் திறமையினால் சர்வதேச புகழ்பெற்றவர் , அதனால் வைபவ் மீது பொறாமை மற்ற நாட்டு அணிகளுக்கு அதிகம் இருந்தது. தற்போது நடந்து முடிந்த ஏ அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் சர்வதேச கிரிக்கெட் உலக கவனம் அனைத்தும் வைபவ் மீதே இருந்தது.

இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் வைபவ் பிரகாசிக்க வில்லை. இதனால் , அவரை ஐபிஎல் வீரர் , டி 20 வீரர் , இன்னும் ஒருநாள் போட்டிகளுக்கு தயாராகாத சிறுவன் என்றெல்லாம் இலங்கை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது. அனைத்திற்கும் மேலாக இலங்கை வீரர்களுடன் ஏற்பட்ட கைக்கலப்பில், பிசிசிஐ வைபவிற்கு அபராதம் விதிக்க அவர் மீது கடுமையான அழுத்தங்கள் அதிகரித்தன. தொடரில் அவர் பங்கு குறைவாக இருந்தது. பல வீரர்கள் அனுபவ அறிவுரை என்ற பெயரில் அந்த சிறுவனை மட்டுப்படுத்த நினைத்தனர். ஆனால் , இவை அனைத்திற்கும் வைபவ் கொடுத்த பதில் சாதாரணமானது அல்ல.

Vaibhav Suryavanshi,Thilak varma and indian Team A
India A team won Tri series

இந்த போட்டியில் வைபவ்வின் ஆட்டம் , என்னை அழுத்தங்கள் இருந்தாலும் அதை பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டேன் என்பதை போல , தன் விக்கெட் பத்தி சிறிதும் யோசிக்காமல் தொடர்ச்சியாக சிக்சர், பவுண்டரி என்று விளாசிக் கொண்டே இருந்தார். 9வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தபோது, ​​இந்தியாவின் ஸ்கோர் 132/1 ஆகவும், அவரது ஸ்டிரைக் ரேட் அசுரத்தனமாக 324.14 என்ற அளவில் இருந்தது. "ஒருவேளை வைபவ் அவுட்டாக விட்டால் இலங்கை அணியின் நிலையை நினைத்து பார்க்கக் கூட முடியாது" என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

முத்தரப்பு ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்ற காரணமாக இருந்த வைபவிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது சதத்தினை தவற விட்டதைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள். " நான் அணியின் வெற்றிக்காக விளையாடுகிறேன் , தனிப்பட்ட சாதனைக்காக அல்ல. நான் போட்டியின் போது சில திட்டங்களை வைத்திருந்தேன். ஆனால் , அவை தோல்வி பெற்றது. நான் , எப்போதும் விராட் அண்ணனுடன் தொடர்பில் இருக்கிறேன்," அவர் எனக்கு தேவையான அறிவுரை வழங்குவார். என்று பக்குவமான பேச்சினை வெளிப்படுத்தி இருந்தார்.

கடின சூழ்நிலைகளில் தன்னுடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்த வைபவ் , தனது தக்க பதிலடியினால் விமர்சகர்களின் வாயினை மூடி உள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com