விராட் கோலி தகுதியற்றவர் – முன்னாள் வீரர் காட்டம்!

Virat Kohli and Sanjay
Virat Kohli and Sanjay

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், விராட் கோலி கடைசி போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். அந்தவகையில் அவர் அந்த விருதுக்கு தகுதியற்றவர் என்று முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை போட்டி ஜூன் மாதம் 2ம் தேதி தொடங்கி கடந்த சனிக்கிழமை முடிந்தது. இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிபோட்டியில் தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதியது. டி20 உலகக் கோப்பை போட்டியில் 176 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 169 ரன்கள் எடுத்த நிலையில் 7 ரன்கள் வித்தியாசத்தில்  இந்திய அணி திரில் வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை பெற விராட் கோலி தகுதியற்றவர் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் பேசியதாவது, “விராட் கோலி மெதுவான இன்னிங்ஸ் விளையாடியதன் மூலம் அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஹர்திக் பாண்டியா விளையாடுவதற்கு வெறும் இரண்டு பந்துகள் மட்டுமே கிடைத்தது. இந்தியாவின் பேட்டிங் நன்றாக இருந்தாலும் விராட் கோலி தன்னுடைய மெதுவான பேட்டிங் மூலம் இந்தியாவை இறுக்கமாக பிடித்து வைத்துக்கொண்டார். 

இதையும் படியுங்கள்:
News 5
Virat Kohli and Sanjay

இந்தியா உறுதியாக தோற்கும் நிலையில் இருந்த போது வெற்றிக்கு உதவியது பந்துவீச்சாளர்கள் மட்டும்தான். எனவே விராட் கோலிக்கு பதிலாக இந்திய பந்துவீச்சாளர்களில்  ஒருவர்தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் அவர்கள் கையில் விட்டுப்போன போட்டியை பந்துவீச்சாளர்கள் தான் மீண்டும் மீட்டுக் கொண்டு வந்தார்கள். “ என்று பேசினார்.

இவர் பேசியதைப் பார்த்து, விராட் வேண்டுமென்றே மெதுவான பேட்டிங்கால், இந்தியாவை இறுக்கி பிடித்துக்கொண்டு நாயகன் போல் நடித்து ஆட்ட நாயகன் விருதை வென்றாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி, அவருக்கு பதிலடி கொடுத்தும் வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com