பாகிஸ்தான் அணியைப் பார்த்து கை கொட்டி சிரித்த விராட், ரோஹித்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Virat Kohli and Rohit
Virat Kohli and Rohit

கடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் பார்த்து விராட், ரோஹித் கை கொட்டி சிரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உலகே எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் அணி எந்தப் பதற்றமும் இல்லாமல் நடைபெற்று முடிந்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ததில், அனைத்து வீரர்களும் அடுத்தடுத்த அவுட்டாகி வெளியேறினர். 19 ஓவர்களிலேயே 119 ரன்களுடன் ஆட்டம் முடித்தது. இந்திய அணி வெறும் 89 ரன்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்ததாக பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இந்திய அணியை போலவே அதுவும் 12 ஓவர்களில் 72 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆகையால்,  6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி.

இந்தப் போட்டியின்போது இந்திய அணியின் வீரர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும்  முகமது சிராஜ் களமிறங்கினர். அப்போது அவர்கள் ஒரு ஒரு ரன்களாக ஓடி ரன்களை சேர்த்தனர். பாகிஸ்தான் அணியிலிருந்து ஷஹீன் ஷா அப்ரிடி 19வது ஓவரை வீசினார். முகமது சிராஜ் அந்த ஓவரின் மூன்றாவது பந்தைத் தட்டி விட்டு ஒரு ரன் ஓட முயன்றார். அப்போது பாகிஸ்தான் ஃபீல்டர் ஒருவர் பந்தை எடுத்து எதிர்முனையை நோக்கி வேகமாக வீசினார்.

இதையும் படியுங்கள்:
ஐநா அறிவிப்பு - 11.06.2024 ஆன இன்று முதலாவது சர்வதேச ‘விளையாட்டுக்களுக்கான’ தினம்!
Virat Kohli and Rohit

ஆனால், யாருமே பந்தை பிடிக்காததால் சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் மீண்டும் ஒரு ரன் ஓடினார். அப்போது பந்தை எடுத்து மீண்டும் ரன் அவுட் செய்ய முயற்சி செய்த பாகிஸ்தான் அணி அதிலும் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் ஃபீல்டர்கள் பந்தை எடுத்து ரன் அவுட் செய்யத் தடுமாறியதை பார்த்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குலுங்கி குலுங்கி சிரித்தனர். விராட் கோலி கைதட்டி சிரித்ததுடன் கைகளை வாயில் வைத்து பொத்திக்கொண்டு அடக்க முடியாமல் சிரித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com