சிவம் துபேவிற்கு எதிராக எழும் குரல்கள்… அம்பத்தி ராயுடு கூறியது என்ன?

Shivam Dube And Ambati Rayudu
Shivam Dube And Ambati Rayudu

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் சிவம் துபேவை தேர்ந்தெடுத்தது குறித்து சில ரசிகர்கள் ஏற்கனவே எதிர்க்கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்தவகையில் தற்போது அம்பத்தி ராயுடுவும் இதுகுறித்து பேசியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெல்ல வேண்டுமென்பது ஒட்டுமொத்த இந்தியர்களின் தற்போதைய முதல் ஆசையாகும். ஆனால், இந்த தொடரின் இந்திய அணியின் வீரர்களின் பட்டியல் வெளியானதிலிருந்தே பல கருத்துகள் ரசிகர்கள் மத்தியிலும் கிரிக்கெட் வட்டாரத்தினர் மத்தியிலும் நிலவி வருகிறது.

ஏனெனில், மிகவும் முக்கியமான போட்டிகளில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் வேண்டுமெனவும், அதேசமயம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமெனவும், இரு கருத்துக்களை மனதில் கொண்டு இந்திய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், அணியில் சில வீரர்களை சேர்த்திருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், சில வீரர்களை சேர்த்திருக்கக் கூடாது என்று மற்றொரு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்த வண்ணம்தான் உள்ளனர்.

அந்தவகையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிவம் துபே இடம் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 11 வீரர்கள் கொண்ட அணியில் ஆட வைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. ஆனால், சிலர் சிவம் துபேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

சிவம் துபே ஒரு ஆல் ரவுண்டர் ஆவார். ஆனால் இந்திய அணியில் ஏற்கனவே 6 பவுலர்ஸ் இருப்பதால், சிவம் துபே பேட்டிங்கில் மட்டுமே களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அவர் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இருந்து அவர் மோசமாக பேட்டிங் ஆடி வருகிறார். அதிலும் முக்கியமான போட்டிகளில் அவர் பந்துகளை வீணடித்து அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார் என்று ரசிகர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தினால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில், சிவம் துபே 15 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து பெரும் ஏமாற்றத்தை அளித்தார்.

இதையும் படியுங்கள்:
பழிக்கு பழி... ரோஹித்தின் மாஸ்டர் ப்ளானால் வீழ்ந்த பாகிஸ்தான் அணி!
Shivam Dube And Ambati Rayudu

அடுத்து உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் அதிரடி ஆட்டம் ஆடிய நிலையில், அவர் 16 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து முக்கியமான இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் அவர் 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ கூட தாண்டாமல் உள்ளது.

இந்த நிலையில் அம்பத்தி ராயுடு பேசியதாவது, “இந்திய அணியில் சிவம் துபேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை தான் ஆட வைக்க வேண்டும் என நான் உண்மையாகவே நினைக்கிறேன்." என்று கூறியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com