India Vs Bangladesh: போட்டிகளை ரத்து செய்யக்கோரி வலுக்கும் குரல்கள்!

India Vs Bangladesh
India Vs Bangladesh
Published on

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளதையடுத்து, வங்கதேச அணி இங்கு வர எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சமீபத்தில் வங்கதேசத்தில் பெரிய போராட்டங்கள் வெடித்தன. பல கொலைகள் மற்றும் ஆலையங்கள் இடிக்கப்பட்டன. இதனையடுத்து அந்தநாட்டின் பிரதமர் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்தநிலையில் தற்போது வங்கதேச அணிக்கும் இந்திய அணிக்கும் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. பின்னர் இரு அணிகளும் டி20 தொடரிலும் விளையாட உள்ளன.

முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வரும் செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள வங்கதேச வீரர்கள் நேற்று சென்னை வந்து இறங்கினர்.
சென்னையில் அவர்களுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லையென்றாலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் கான்பூர் மற்றும் குவாலியர் ஆகிய இடங்களில் வலுவான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதாவது வங்கதேசத்து அணி இங்கு வந்தால், போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மகாசபா அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து மகாசபாவின் துணை தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் கூறியதாவது, "வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். கோவில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்து மகாசபா இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள குவாலியரில் எதிர்ப்பு தெரிவிக்கும்." என்று பேசினார்.

ஆகையால் வங்கதேச அணி வீரர்கள் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் தங்களது பாதுகாப்பு குறித்து பேசியுள்ளனர். அவரும் பாதுகாப்புக்கு எந்தவித குறையும் இருக்காது என்று உறுதியளித்துள்ளார். ஆனால், இந்த போராட்டம் வங்கதேச அணியை மட்டும் பாதிக்காது, இந்திய அணி வீரர்களையும்தான் பாதிக்கும். ஏனெனில், போராட்டக்காரர்கள் மைதானத்தில் இறங்கினால், இரு அணிகளுக்குமேதான் பிரச்னை.

இதையும் படியுங்கள்:
தோனி கோபப்பட்டு பாட்டிலை எட்டி உதைத்தார்… அவர் கண்ணைப் பார்க்கவே பயந்தோம் – பத்ரிநாத்!
India Vs Bangladesh

அதேபோல் கான்பூர் மற்றும் குவாலியர் மைதானங்களின் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றவும் வாய்ப்பில்லை என்பதுபோல்தான் தெரிகிறது. ஏனெனில் பிசிசிஐ அதிகாரி ஒருவர், எந்த ஒரு நிலையிலும் மைதானம் மாற்றப்படாது என்று சில காலங்களுக்கு முன்னர் கூறினார். ஆனாலும், போராட்டம் வலுத்துவிட்டால், வேறு எந்த வாய்ப்பும் இல்லையென்பதால், கடைசி நிமிடத்தில் மாற்றித்தான் ஆக வேண்டும் என்ற சூழல் ஏற்படும்.



Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com