
வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் அடித்துள்ளார். இது அவருடைய முதல் டெஸ்ட் சதமாகும். மான்செஸ்டரில் நடந்த போட்டியில் ஜடேஜாவுடன் சேர்ந்து சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்தது இதுவே முதல் முறை. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இவர் 150 ரன்களுக்கு மேல் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய வீரராக உருவெடுத்து வருகிறார்.
வாஷிங்டன் சுந்தர் இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர். இடது கை பேட்டிங் மற்றும் வலது கை ஆஃப்-ஸ்பின் பந்து வீசும் ஆல் ரவுண்டர் இவர். சென்னையில் அக்டோபர் 5, 1999 அன்று பிறந்த இவர், தன்னுடைய கிரிக்கெட் ஆர்வத்திற்கு நிதி உதவி செய்த பி.டி. வாஷிங்டன் என்ற நபரின் நினைவாக அவருடைய தந்தை மணி சுந்தர் அவர்கள் அவருக்கு இப்பெயரிட்டார். இவர் 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானவர். இவர் நான்கு அல்லது ஐந்து வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட தொடங்கியவர். தனது ஆரம்பக் கல்வியை செயிண்ட் பேட்ஸ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளியில் படித்து, சென்னை இந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவருடைய சகோதரி ஷைலஜா சுந்தர் அவர்களும் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர் ஆவார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். அஸ்வினைப் போலவே இவரும் இளம் வயதிலேயே பேட்ஸ்மேனாக இருந்து ஆஃப் ஸ்பின்னர் ஆக தனது பெயரை கிரிக்கெட் உலகில் பதித்தவர். 2016ல் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கோப்பையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய பிறகு, 2017 ஐபிஎல்லில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் அஸ்வினுக்கு பதிலாக ஆடியவர். அத்துடன் தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லவும் சிறந்த எகானமி ரேட்டில் பந்து வீசியவர்.
தமிழ்நாடு அணியின் ஆஃப் ஸ்பின்னர் ஆல்ரவுண்டர் ஆர். அஸ்வினுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் 17 வயதில் டி20 அறிமுகமானபோது தனது திறமையை வெளிப்படுத்தினார். ஐபிஎல் 2017ல் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கு மாற்றாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அவர் தன்னுடைய அறிமுக சீசனில் 11 ஆட்டங்களில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணியை இறுதிப்போட்டிக்கு வர உதவினார்.
பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB) அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அங்கு அவர் அடுத்த நான்கு சீசன்களில் 31 போட்டிகளில் விளையாடினார்.
ஐபிஎல் 2020ல் அவர் 15 ஆட்டங்களில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு ஓவருக்கு ஆறு ரன்களுக்கும் குறைவாக விட்டுக்கொடுத்தார்.
அடுத்த மூன்று ஆண்டுகள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(SRH) அணியுடன் கழித்தவர் அங்கு 18 போட்டிகளில் விளையாடினார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ்ஸால்(GT) 3. 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.