
உலகில் பெரும்பாலான நபர்களுக்கு உடல் எடையைக் கூட்ட வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்பது மிகப்பெரிய இலக்காக இருந்துவரும். அதற்காக இணையத்தில் பல விஷயங்களைத் தேடிப்பார்த்து அதை முயற்சி செய்வார். ஆனால், உடல் எடை சார்ந்த விஷயங்களில் முக்கிய பங்கு வகிப்பது 'மெட்டபாலிசம்' என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
நீங்கள் உண்மையிலேயே முறையாக உங்கள் உடல் எடையைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ விரும்பினால் இந்தப் பதிவை முழுமையாகப் படிக்கவும்.
மனிதர்களை பொதுவாக மூன்று உடல் வாக்கு கொண்டவர்களாகப் பிரிக்க முடியும்.
Ectomorph - ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள். அதாவது எவ்வளவு சாப்பிட்டாலும் இவர்கள் ஒல்லியாகத்தான் இருப்பார்கள்.
Mesomorph - நடுநிலையான உடல்வாகு கொண்டவர்கள். இவர்கள் அதிகம் சாப்பிட்டால் குண்டாவர்கள், குறைவாக சாப்பிட்டால் ஒல்லியாவர்கள்.
Endomorph - இவர்கள் குறைவாக சாப்பிட்டாலும் குண்டாக்கிக் கொண்டே போவார்கள்.
இந்த மூவரது உடல்வாகுவும் வித்தியாசமாக இருப்பதற்கு Metabolism தான் காரணமாக இருக்கிறது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், மெட்டபாலிசம் என்பது நமது உடலுக்கான போதுமான ஆற்றலை உணவிலிருந்து உறிஞ்சும் வேகமாகும். அதாவது நம்முடைய உடலின் ஆற்றலுக்கு ஆதாரமாக இருப்பது உணவு மற்றும் உள்ளே இழுக்கப்படும் ஆக்சிஜன் தான். அதை எவ்வளவு வேகமாக நம்முடைய உடல் ஆற்றலாக மாற்றுகிறது என்பதுதான் மெட்டபாலிசம்.
Ectomorph உடல்வாகு கொண்டவரின் மெட்டபாலிசம் வேகமாக இருக்கும். எனவே அவர் உட்கொள்ளும் உணவின் ஆற்றல்கள் முழுமையாக உறிஞ்சப்படுவதற்கு முன்பே செரித்துவிடும். இதேபோல Endomorph உடல்வாகு கொண்டவரின் மெட்டபாலிசம் குறைவாக இருப்பதால், அவர்கள் உண்ணும் உணவின் ஆற்றல் முழுமையாக உடலுக்கு உறிஞ்சப்படும். இதுதான் அவர்கள் குறைவாக சாப்பிட்டாலும் குண்டாவதற்கு காரணமாகும். ஆனால், Mesomorph உடல்வாகு கொண்டவர்கள் பாகியசாலிகள். பெரும்பாலான இந்திய ஆண்களின் உடல்வாகு Mesomorph வகையிலேயே இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. இவர்கள் உடல் எடையைக் கூட்டுவதும் குறைப்பதும் எளிதானது.
மேலும் ஒருவருடைய மெட்டபாலிசத்தை நிர்ணயம் செய்யும் காரணிகள் பலது இருக்கிறது. அதில் வயது, ஹார்மோன், ஜெனிடிக்ஸ், பாலினம் போன்றவை முக்கிய அங்கம் வகிக்கிறது. ஒருவருக்கு வயது கூடக் கூட அவருடைய மெட்டபாலிசம் குறைந்து கொண்டே செல்லும். இதன் காரணமாகவே வயதாகும்போது நம்முடைய உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அடுத்ததாக ஹார்மோன் என்று பார்க்கும்போது தைராய்டு ஹார்மோன் உடலில் அதிகமாக சுரந்தால், அது மெட்டபாலிசத்தை குறைக்கும். அதனால்தான் தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் குண்டாக இருக்கிறார்கள்.
எனவே நீங்கள் உடல் எடையை கூட்டுவது அல்லது குறைப்பதற்கு முன் எந்த வகை உடல்வாகு கொண்டவர் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு நீங்கள் அடைய விரும்பும் நிலையை எளிதாக எட்டலாம். இதைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், முறையற்று செயல்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்காது.