பொதுவாகவே நாம் சிறு வயதுமுதலே அதிக தண்ணீர் குடித்தால் தான் உடலுக்கு நல்லது என கேள்விப்பட்டிருப்போம். அதிக தண்ணீர் கிட்னியை சுத்தம் செய்து எந்த பிரச்சனைகளும் வராமல் தடுக்கும் என்று நாம் நினைத்து கொண்டிருப்போம். எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சு என்பது உண்மை போலும்.
இதனை மெய்பிக்கும் விதமாக அதிக தண்ணீர் குடித்ததால் அமெரிக்காவில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 20 நிமிடங்களில் 2 லிட்டர் தண்ணீர் குடித்ததை அடுத்து திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
வாட்டர் டாக்ஸிட்டி :
ஒரு நபர் அதிகப்படியான தண்ணீர் குடிக்கும் போது அது நஞ்சாக மாறுகிறது. இதையே வாட்டர் டாக்ஸிட்டி என்று கருதுகின்றனர். ஒரு நபர் அதிகப்படியான தண்ணீரை குடிக்கும் போது சிறுநீரகங்கள் உபரிநீரை அகற்றும் திறனை குறைத்து, எலக்ட்ரொலைட்டுகள், சோடியத்தை நீர்த்து போக செய்யும். இதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
அறிகுறிகள் :
குமட்டல், தலைவலி, தசை பிடிப்புகள், வலிப்புத்தாக்கங்கள், மூளை வீக்கம் ஏற்படும். சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
வாட்டர் டாக்ஸிட்டி ஏற்படுவதற்கு காரணம் என்ன :
மருத்துவ அறிக்கையின் படி, சிறுநீரகங்கள் ஒரு மணி நேரத்திற்கு 0.8 லிட்டர் முதல் 1.0 லிட்டர் தண்ணீரை மட்டுமே அகற்ற முடியும். இதனால் அதிக நீர் குடித்தால் உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை சீர்குலைக்கும். இதுவே வாட்டர் டாக்ஸிட்டியின் பெரிய காரணம் ஆகும்.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் :
2013 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு சுமார் 20-28 லிட்டர் தண்ணீரை அகற்ற முடியும், எனவே ஹைபோநெட்ரீமியாவைத் தவிர்க்க, சிறுநீரகங்கள் அகற்றக்கூடிய தண்ணீரை விட அதிக தண்ணீர் குடிக்க கூடாது.
ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட நேர மதிப்பீட்டைக் கொடுக்கவில்லை என்றாலும், குறுகிய காலத்தில் 3-4 லிட்டர் தண்ணீரைக் குடித்தால், ஹைபோநெட்ரீமியா அறிகுறிகள் உருவாகலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.