நீரிழிவு நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்தால் சமாளிப்பது எப்படி?

உடல் நலம்
நீரிழிவு நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்தால் சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோயின் தலைநகராக இந்தியா மாறி வருகிறதா?

உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. சர்வதேச நீரிழிவு நோய் கூட்டமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி உலகம் முழுவதும் 50.37 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். 2019ஆம் ஆண்டு புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது 16 சதவிகிதம் அதிகமாகும்.

தோராயமாக 18 வயதுக்கு மேற்பட்ட 7.7 கோடி பேர் இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2045 ஆம் ஆண்டில் 13.4 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையத்தின் இளையோர் நீரிழிவு பதிவுகளின்படி இந்தியாவில் 25 வயதுக்கு உட்பட்ட நான்கு பேரில் ஒருவர் டைப்-2 நீரிழிவு வகையின் லேசான அறிகுறிகளை கொண்டிருக்கின்றனர் என தெரியவருகிறது.

கோவிட் பெருந்தொற்று அதிகம் இருந்த காலகட்டத்தில் கூட, நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வருகிறது.

நீண்ட நேரம் பணியாற்றுவது, பல்வேறு சுழற்சி முறைகளில் பணியாற்றுவது ஆகியவை ஒருவரை  அழுத்தத்தை நோக்கி இட்டுச் செல்லும். இதுவே நீரிழிவு நோய் நேரிடுவதற்கான காரணமாகவும் இருக்கலாம் என மருத்துவர் மிஸ்ரா குறிப்பிடுகிறார். 

நடுத்தர வயது கொண்டவர்களிடம் நீரிழிவு நோய் ஏன் அதிகரித்துள்ளது?

வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே நீரிழிவு நோய் பாதிக்கும் என்பது தவறான எண்ணம். யார் ஒருவரையும் எந்த வயதிலும் நீரிழிவு நோய் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

"நவீன காலக்கட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள்,"  என இந்திய நீரிழிவு நோய் பவுண்டேஷன் தலைவர் மருத்துவர் அனூப் மிஸ்ரா கூறுகிறார்.

குடும்பத்தினருக்கு ஏற்கனவே நீரிழிவு இருந்ததற்கான வரலாறு, வாழ்க்கை முறை பழக்கங்கள் ஆகியவை நீரிழிவு நேரிடுவதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கின்றன.

நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளான ஒருவர், மருந்துகளுடன் தகுந்த உணவு முறைகள், வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளாவிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்துவது சிக்கலானது என அமெரிக்காவின் நீரிழிவு மையம் மற்றும் எண்டோகிரைனாலஜியின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் லக்ஷ்மி லாவண்யா அலபதி கூறினார்.

இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு நோய்

இளம் பெண்களிடம் நீரிழிவு நோய் பரவல் என்பது 2000ஆம் ஆண்டில் இருந்தே அதிகரித்து வருகிறது. இது குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில், குறிப்பாக நகரங்களில் வசிக்கும் இளைஞர்களிடம் அதிக எண்ணிக்கையில் நீரிழிவு நோய் நிகழ்வுகள் காணப்படுவது தெரியவந்திருப்பதாக கூறினார்.

இந்தியாவின் நீரிழிவு நோய் வழிகாட்டு முறைகளில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நீரிழிவு நோய் இருக்கிறதா என்று அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எப்படி அவர்கள் உறுதி செய்கின்றனர்?

காலையில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கும்போது உடலின் க்ளுக்கோஸ் அளவு வரம்பு 70-100 ஆக இருந்தால் இது வழக்கமான அளவாகும். இந்த வரம்பு 100-125 மில்லி கிராம்களாக இருந்தால் இது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை என்றும், 126க்கு அதிகமாக இருப்பது நீரிழிவு நோய் அறிகுறி என்றும் கணக்கிடப்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

எனினும்,  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதை காட்ட, மருந்து நிறுவனங்கள் பலன் பெறும் வகையில் இந்த க்ளுக்கோஸ் அளவுகள் குறைக்கப்பட்டிருப்பதாக சில நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தவிர, மருத்துவம் மற்றும் இதயவியல் பேராசிரியர் மருத்துவர் பிஎம்.ஹெக்டேவும் இதே கேள்வியை எழுப்புகிறார். அண்மையில் இவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.    

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் உயர்த்தப்பட்ட புள்ளிவிவரங்களுக்கு உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த தரநிலைகள் காரணமா?

உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த தரநிலைகள் உலகம் முழுவதும் பொருந்தக்கூடியது என மருத்துவர் லட்சுமி லாவண்யா அலபதி கூறுகிறார்.

மருந்து நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் அதிக அளவு கொடுக்கின்றனவா?

"இது தவறான கருத்து. தவிர, உண்மையில் மருத்துவர்கள்தான் நோயாளிகளிடம் மாற்றம் செய்யும்படி அறிவுறுத்த வேண்டும்," என்கிறார் மருத்துவர் லட்சுமி. "குறைந்த அளவிலான மருந்தில் இருந்துதான் சிகிச்சைகள் தொடங்கப்பட வேண்டும். நீரிழிவு நோய் தாக்கத்தின் அளவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்கப்பட வேண்டும். மருந்துகளின் அளவை குறைக்க வேண்டிய தேவை அல்லது அதிகரிக்க வேண்டிய தேவைக்கு ஏற்ப மருந்துகள் மாற்றப்பட வேண்டும்," என்றும் அவர் சொல்கிறார்.

2019ஆம் ஆண்டில் 10.5 லட்சம் பேர் நீரிழிவு நோயால் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இந்த பின்னணியில் உலக சுகாதார அமைப்புடன் கூடுதலாக உலகம் முழுவதும் பரவியுள்ள  சில இதர சுகாதார அமைப்புகள், முன்கூட்டியே கண்டறிவது குறித்து பரிந்துரைக்கின்றன என மருத்துவர் லட்சுமி கூறுகிறார்.

சாதாரண நீரிழிவு நோயாளிகளுடன் ஒப்பிடும்போது, கோவிட் தொற்று காரணமாக க்ளுக்கோஸ் அளவு அதிகரித்திருக்கிறது. நீரிழிவு நோய் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என கூறினார்.

 நீரிழிவு நோய் நிலையில் மாற்றம் ஏற்படுவது சாத்தியமா?

அண்மைக் காலமாக, பல்வேறு அமைப்புகளின் விளம்பரங்களில், நீரிழிவு நோய் நிலையில் மாற்றம்  என கோரப்படுவதை பரவலாக இணையவெளியில் காணமுடிகிறது. தங்கள் அமைப்புகளால் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளின்படி நீரிழிவு நோய் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாக நோயாளிகளின் அனுபவங்களை பகிர்ந்திருக்கின்றனர். 

நூற்றுக்கணக்கான நல மையங்கள், சாத்வீக உணவு முன்னெடுப்பாளர்கள் மற்றும் இணையவழி வணிக தளங்கள்  (குறைந்த குளுக்கோமிக் உள்ளடக்கம் கொண்டவை) லோகி (LOGI ) எனப்படும் உணவு வகையை விற்பனை செய்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருகிறது என்ற அறிகுறியையும் இவை குறிப்பிடுகின்றன.

"வாழ்க்கை முழுவதும் மருந்து எடுத்துக்கொண்டால்தான் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்ற தீர்வை எதிர்பாராதவிதமாக உலகம் முழுவதும் உள்ள நீரிழிவு நோய் அமைப்புகள் கொண்டிருக்கின்றன," என மருத்துவர் ஜேசன் ஃபாங் குறிப்பிடுகிறார்.      

நீரிழிவு மாற்றம் குறித்த பிரசாரங்கள்

"உடல்நல மையங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்வதால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது. உணவு முறை மற்றும் உடற்பயிற்சியோடு கூடுதலாக, மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்,".

ஒவ்வொருவருக்கும் பொதுவான உணவு திட்டம் இருக்க முடியாது, இது தனிப்பட்ட நபர்களின் உடல் அமைப்பு, உடல் நலத்தின் நிலை ஆகியவற்றைப் பொறுத்தது 

என்ன மாதிரியான உணவு திட்டம் ஏற்றது?

1923ஆம் ஆண்டில் சர் வில்லியம் அஸ்லர் என்பவர் எழுதிய ஒரு மருத்துவ அறிக்கையில், கார்ப்போஹைட்ரேட்டை கிரகிக்கும் உடலின் திறனில் இழப்பு ஏற்படுவதே நீரிழிவு நோயின் அறிகுறி என கூறப்பட்டுள்ளது.

 உணவு திட்டத்தில் சர்க்கரையின் அளவு  மற்றும் கார்ப்போஹைட்ரேட்களை குறைப்பதன் மூலம் இன்சுலின் அளவை குறைப்பதை இது பரிந்துரைக்கிறது.

அதிக நார்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவற்றை  கொண்ட உணவுகளை நீங்கள் உண்ணலாம் என்றும் அவர் கூறுகிறார்.

ஆரஞ்சு, தர்பூசணி,  கொய்யா, புரதம் நிறைந்த பீன்ஸ், பருப்பு வகைகள், குறைந்த கொழுப்புள்ள கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட கார்ப்போஹைட்ரேட் இல்லாத உணவுகளை உண்ணலாம்.

பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள், ஓட்ஸ், அரிசி கேக்குகள், பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவை உடல்நலனுக்கு நல்லது என இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com