ஆடுகளம் எப்படி இருந்தால் இந்தியா நான்காவது டெஸ்ட்டில் ஜெயிக்கும்? - கவாஸ்கரின் கருத்து!

ஆடுகளம் எப்படி இருந்தால் இந்தியா நான்காவது டெஸ்ட்டில் ஜெயிக்கும்? - கவாஸ்கரின் கருத்து!
Published on

இந்திய அணி எச்சரிக்கையுடன் விளையாடினால் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜெயிக்கலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தூரில் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் தரமாக இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புகார் கூறியிருந்த்தை அவர் சுட்டிக்காட்டினார்.

ஹோல்கர் ஸ்டேடியத்தின் ஆடுகளம் பேசுபொருளாக இருந்தது. அது பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கே சாதமாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நான்காவது டெஸ்ட் போட்டி நடக்கும் இடமும் இதேபோல இருந்தால் அது போட்டியை நடத்தும் இந்திய அணிக்கு பாதமாகவும் அமையலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் மாத்யூ குஹ்னிமான் மற்றும் நாதன் லியான் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி அதிக விக்கெட்டுகளை எடுத்ததை சுட்டிக்காட்டிய கவாஸ்கர், நான்காவது டெஸ்டில் இந்தியா எச்சரிக்கையுடன் விளையாடினால்தான் ஜெயிக்க முடியும் என்றார்.

இதுபற்றி இந்திய அணி சிந்தித்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், 2012-13 ஆண் ஆண்டில் இதேபோன்ற நிலை ஏற்பட்டதாகவும், அப்போது கீரிம் ஸ்வான் மன்றும் மான்டி பனேஸர் ஆகியோர் இங்கிலாந்துக்கு வெற்றி தேடித்தந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற ஆடுகளம் இருப்பது சரியானதாக இருக்காது. ஆடுகளம் என்பது ஆடுபவர் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருவருக்கும் சமநிலையாக இருக்க வேண்டும். ஆடுகளம் முதல் இரண்டு நாள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பேட்ஸ்மன்கள் ரன் எடுக்கவும் வசதியானதாக இருக்க வேண்டும். மூன்றாவது மற்றும் நான்காவது நாளில் தான் பந்து சூழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

ஆமதாபாதில் என்ன நடக்கப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. ஆமதாபாதில் ஆடுகளம் சமநிலையில் இருந்தால் இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு இருக்கும். ஆனால், இந்தூர் ஆடுகளம் போலவே இருந்தால் அது நமக்கு சவாலாகவே இருக்கும் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தூர் ஆடுகளம் பற்றி கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் குறைகூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தூர், ஹோல்கர் ஸ்டேடியத்தில் ஆடுகம் மிக மோசமாக இருந்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புகார் கூறியுள்ளது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கே சாதகமாக இருந்ததால் மூன்றாவது நாளே ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.

ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மென்களுக்கும் சமநிலையாக இல்லை. ஆரம்பத்திலிருந்தே சுழற்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக இருந்தது என்று போட்டியின் நடுவர் கிறிஸ் பிராட் கூறினார்.

முதலில் போட்டி தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்தூரில் போட்டி நடைபெறும் தெரிவிக்கப்பட்டது. குறுகிய காலமே இருந்ததால் ஆடுகளத்தை தயார் செய்ய முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது போட்டி ஆமதாபாதில் வருகிற மார்ச் 9 ஆம் தேதி தொடங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com