இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி எப்போது, எங்கு நடந்தது தெரியுமா?

Indian team in England
Indian team in EnglandImge credit: wikipedia

ஜூன் மாதம் 1932ம் ஆண்டு இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்தில் விளையாடியது. இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரில் மூன்று நாள் கொண்ட ஒரே ஒரு போட்டி மட்டும்தான் நடைபெற்றது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணியிலிருந்து பில் போவ்ஸ் என்ற ஒரே ஒரு அறிமுக வீரர்தான் விளையாடினார். ஆனால் இந்திய அணியில் விளையாடிய 11 வீரர்களுமே அறிமுக ஆட்டக்காரர்கள்தான். இந்திய அணியின் கேப்டனாக சி.கே நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் இங்கிலாந்து அணியின் கேப்டனாக டாக்லஸ் ஜார்டின் என்பவர் இருந்தார். இப்போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்டஸ் மைதானத்தில் ஜூன் 25 முதல் 28ம் தேதி ( ஓய்வு நாள் உட்பட) வரை நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் டாக்லஸ் 79 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் நாயுடு அவரை விக்கெட் இழக்கச்செய்தார். நாவ்லே அமிஸ் என்ற வீரர் 65 ரன்கள் எடுத்தார். மேலும் இரண்டு இங்கிலாந்து வீரர்கள் அரை சதம் அடித்தனர். அந்தவகையில் இங்கிலாந்து அணி வீரர்கள் மொத்தம் 259 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனார்கள். இந்திய அணியில் முகமது நிஸ்ஸார் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். நாயுடு மற்றும் அமர் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இரண்டாவது நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் மூன்றாவது நாள் தான் இந்திய அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. பவுலிங்கில் வெறித்தனமாக விளையாடிய இந்திய அணி பேட்டிங்கில் அந்த அளவுக்கு விளையாடவில்லை. இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்தவர் கேப்டன் நாயுடு தான். அதுவும் 40 ரன்களே. பின்னர் நாமல் 33 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் பில் போவ்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதேபோல் பில் ஓஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையும் படியுங்கள்:
நாம் பேசப்போவதை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் நியூரான்கள்.. அடேங்கப்பா! 
Indian team in England

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இந்திய அணிக்கு 346 ரன்கள் இலக்காக அமைந்தது. இந்த இன்னிங்ஸிலும் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. அமர் சிங் மற்றும் லால் சிங் இணைந்து 74 ரன்கள் குவித்தனர். இந்திய அணி மொத்தம் 187 ரன்களே எடுத்ததால் இங்கிலாந்து அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.

இப்போட்டியின் மூலமாக, டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டியில், முதல் விக்கெட் எடுத்த பெருமையும், ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை முதலில் எடுத்த இந்தியர் என்ற பெருமையும் முகமது நிஸ்ஸாருக்குக் கிடைத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com