12 வயதில் வீட்டை விட்டு சென்று 23 வயதில் கோப்பையுடன் திரும்பிய வீராங்கனை... யார் இந்த ரேணுகா சிங் தாக்கூர்?

Renuka Singh Indian cricketer
Renuka Singh Indian cricketer
Published on

ந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச டி20 கிரிக்கெட் மகளிர் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து மகளிர் அணி கைப்பற்றியது. ஆனால், இந்த தொடரில் கலந்துக்கொண்ட இந்திய அணியின் ரேணுகா தாக்கூர் எடுத்து விக்கெட்டுகள் அவரின் மறுபிரவேசமாக பார்க்கப்படுகிறத.

ரேணுகா தாக்கூர் முதுகுவலி காரணமாக 6 மாதங்களுக்குப் பிறகு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் கலந்துக்கொண்டார். இந்த போட்டியில் நான்கு ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் அவர். இதனையடுத்து ரேணுகா தாக்கூர் குறித்து இணையத்தில் பல தேடத்தொடங்கியுள்ளனர்.

ரேணுகா சிங் ஜனவரி 2ம் தேதி 1996ம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேஷத்தில் உள்ள ஷிம்லாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். வலதுகை மிதவேக பவுலரான ரேணுகாவிற்கு 2019-2020 ம் ஆண்டு நடைபெற்ற சீனியர் மகளிர் ஒருநாள் லீக் ஆட்டம்தான் அவரின் கிரிக்கெட் கெரியருக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த தொடரில் மொத்தம் 23 விக்கெட்டுகள் எடுத்து அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார் ரேணுகா சிங். இதுவே அவருக்கு இந்திய தேசிய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. ஆகஸ்ட் மாதம் 2021ம் ஆண்டு ரேணுகா இந்திய அணியில் ஒரு துணை ஆட்டக்காரராக களமிறங்கினார்.

ஆனால் அவருக்கு அந்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் அதே ஆண்டு அக்டோபர் மாதம் டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து தனது முதல் சர்வதேச அறிமுக ஆட்டத்தை விளையாடினார் ரேணுகா சிங். அடுத்த அண்டே மகளிர் உலக கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான ஒரு போட்டியில் ரேணுகா விளையாடினார். பிறகு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முதறையாக விளையாடினார், ரேணுகா.

ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் இவருக்கு ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. அந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த போட்டியாளர் என்ற பட்டத்தை வென்றார். மேலும் அதற்காக அவருக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது.

சர்வதேச சாதனைகள்:

ரேணுகா சிங் 2022ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். அதேபோல் இங்கிலாந்திற்கு எதிரான அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும்போது ரேணுகா வெறும் 4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அணியை வெற்றிபெற வைக்க அவர் போராடிய இந்த போராட்டம் தோல்வியில் முடிந்தாலும், தனிப்பட்ட விதத்தில் அவர் பெரிய சாதனையையே படைத்தார்.

அதேபோல் ரேணுகா ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ‘ஒரு போட்டியில் அதிகம் நான்கு விக்கெட்டுகள்’ எடுத்த பட்டியலில் உலகளவில் 42வது இடத்தில் உள்ளார். அதிகப்படியான தொடர் 4 விக்கெட்டுகள் எடுத்ததிலிலும் 3ம் இடத்தில் உள்ளார். இவரின் இந்த தொடர் சாதனைக்கு காரணம் அவர் கடந்து வந்த பாதை என்றும் கூறலாம்.

கோப்பையுடன் திரும்பிச் சென்றவர்

சிறு வயதிலேயே தந்தையை இழந்த ரேணுகாவின் குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தது. பிறகு இவரது அம்மா குடும்ப சூழ்நிலைக் காரணமாக பொது சுகாதாரத் துறையில் நான்காம் பிரிவு ஊழியராக பணியாற்றினார். ஆனால் அவருடைய அம்மா இந்த கஷ்டங்களை ரேணுகாவிடம் திணிக்காமல் அவர் லட்சியத்துக்கு ஆதரவாக நின்றார். சிறு வயதிலேயே கிராமத்தில் உள்ள இளைஞர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார் ரேணுகா.

பின்னர் ரேணுகா தனது 12ம் வயதில் வீட்டை விட்டு கிரிக்கெட் அகடாமிக்கு சென்றார். அதன்பின் அவர் வெகு காலம் அவருடைய வீட்டைத் திரும்பி பார்க்கவே இல்லை. அவர் அடுத்து வீட்டிற்கு சென்றது 2019 ம் ஆண்டு அவர் வாங்கிய கோப்பையுடன் தான்.

ரேணுகா சிங் இந்திய அணியில் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், சாதனைகளை அள்ளிக் குவித்து வருகிறார். அதிலும் சில தொடர்களில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. தான் மட்டும் சாதனைப் படைக்க வேண்டும் என்றில்லாமல் நாட்டை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற அவருடைய எண்ணமே அவரின் இந்த சாதனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும் கூறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com