உலகின் பணக்கார விளையாட்டு வீரர் யார் தெரியுமா? ரொனால்டோ, மெஸ்ஸி, விராட் கோலியோ அல்ல!

Who is the richest athlete in the world?
Who is the richest athlete in the world?

பல்வேறு துறைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் தங்களது இடைவிடாத உழைப்பின் மூலமும், திறமையை வெளிப்படுத்தியும் முன்னிலையில் இருந்து ஓப்பந்தங்கள், விளம்பரங்கள், முதலீடுகள் மற்றும் பல்வேறு வணிக முயற்சிகள் மூலம் கணிசமான அளவு பணம் சம்பாதித்து வருவதை யாரும் மறுக்க முடியாது.

பிரபல கால்பந்து வீர்ர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி போன்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்தாலும் இன்றைய விளையாட்டு உலகில் பணக்கார விளையாட்டு வீர்ராக வலம் வருபவர் யார் தெரியுமா?

Michael Jordan
Michael Jordan

அவர் வேறு யாரும் அல்ல. பிரபல கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டான்தான்! சிகாகோ புல்ஸ் அணியில் இருந்த காலத்தில் கூடைப்பந்து விளையாட்டில் அவர் ஆதிக்கம் செலுத்தியதுடன், அதிக அளவு பணமும் சம்பாதித்தார்.

இப்போது 60 வயதை எட்டியுள்ள மைக்கோல் ஜோர்டானின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 3 பில்லியன் டாலர். ஏறக்குறைய ரூ.24,863 கோடி. உலகின் பணக்கார விளையாட்டு வீர்ர் இவர்தான் என்று போஃபர்ஸ் தெரிவித்துள்ளது. பொதுவாக கால்பந்தாட்ட பிரபலங்கள்தான் அதிக சொத்துவைத்துள்ளவர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதையும் மீறி பிரபல கூடைப்பந்து வீர்ரான மைக்கேல் ஜோர்டான், சொத்து மதிப்பில் முதலிடத்தில் உள்ளார். கூடைப்பந்து ஆட்டத்தின் போதும், அதன் பிறகும் அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வுதான் இதற்கு காரணம்.

இதையும் படியுங்கள்:
அயலானை கைப்பற்றிய பிரபல ஒடிடி தளம்..!
Who is the richest athlete in the world?

மைக்கேல் ஜோர்டான் இடம் குவிந்துள்ள சொத்துக்கள் வெறும் ஊதியத்தால் மட்டும் கிடைத்ததல்ல. முதலீடுகள், மெக்டொனால்டு, காடோரடே, ஹானஸ் மற்றும் நைக் உள்ளிட்ட பிராண்டட் நிறுவன விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருமானமும் இதில் உள்ளது. விளம்பரங்கள் மூலம் மட்டும் அவர் 2.4 பில்லியன் டாலர் சொத்து சேர்த்தார்.

2023 இல் உலகின் பெரும் பணக்கார விளையாட்டு வீரர் என்ற பெயரை ஜோர்டான் தட்டிச் சென்றாலும், பெரும்பாலான பணத்தை அவர் சார்லோட் ஹார்நெட்ஸ் என்னும் வங்கிசாரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். அது அவருக்கு நல்ல பலனை கொடுத்த்து. இதன் மூலம் அவரது சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலராக அதிகரித்து உச்சத்தை தொட்டது. ஒரு கட்டத்தில் அவர், தன் பங்கு முதலீடுகளை ஆரம்ப விலையைவிட 17 மடங்குக்கு அதிகமாக விற்று சாதனை படைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com