அதிர்ஷ்டம் இல்லாத எண்ணா 13? 13 ரன்களில் அவுட்.. அதோடு முடிந்த கிரிக்கெட் வாழ்க்கை!

Why is 13 considered as an unlucky number in cricket?
Why is 13 considered as an unlucky number in cricket?
Published on

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சில வினோதமான நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு. அதில் முக்கியமானது, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சரியாக 13 ரன்களில் ஆட்டமிழந்த வீரர்கள் மற்றும் அந்த 13 என்ற எண் வீரர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள்.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் 13 ரன்களில் அவுட் ஆன வீரர்கள் குறித்து காண்போம்.13 அதிர்ஷ்டம் இல்லாத எண் என்று கருதுபவர்கள் பலர் உண்டு. அது கிரிக்கெட் ஆட்டத்தையும் விட்டு வைக்கவில்லை போலும்.

ஒரு இன்னிங்சில் 13 ரன்கள் எடுத்தாலே ஒரு மாதிரி பார்ப்பவர்கள். மத்தியில் இரண்டு இன்னிங்சிலும் 13 ரன்கள் மட்டுமே பதிவு செய்த வீரர்களின் நிலைமை. அப்படி எடுத்த பின் நிகழ்ந்தது தான் முக்கியமான ட்விஸ்ட்.இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 13 ரன்கள் மட்டுமே எடுத்த வீரர்களின் பட்டியலில் மூன்று விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த இருவரும், இங்கிலாந்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவர். தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த தலா ஒரு வீரரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

வரலாற்றில் நிகழ்ந்த அந்த 13 ரன் வினோதங்கள்:

1. இங்கிலாந்தின் டபுள்யூ பாரிமோன்ட் (1935):

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில், விக்கெட் கீப்பர் பாரிமோன்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 13 ரன்களில் அவுட் ஆனார். அந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆச்சரியம் என்னவென்றால், இந்த டெஸ்டிற்குப் பிறகு பாரிமோன்ட் வேறு எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை.

2. இந்தியாவின் ஜஹாங்கிர் கான் (1936):

லார்ட்ஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர் ஜஹாங்கிர் கான் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 13 ரன்களில் வெளியேறினார். சிறந்த பந்துவீச்சாளரான இவரால் இந்த டெஸ்டில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. இந்திய அணியும் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தொடருடன் ஜஹாங்கிர் கானின் டெஸ்ட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்த அதிகபட்ச ரன்னும் 13 தான்!

3. தென் ஆப்பிரிக்காவின் ஜார்ஜ் பியூல்லர்டன் (1947):

இங்கிலாந்து,தென் ஆப்பிரிக்க அணிகள் ஆடிய லீட்ஸ் டெஸ்டில் இந்த இரண்டு இன்னிங்ஸ் 13 ரன்கள் நிகழ்வு அரங்கேறியது.தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஜார்ஜ் பியூல்லர்டன் முதல் இன்னிங்சில் எட்ரிச் பந்திலும், இரண்டாவது இன்னிங்சில் கிரான்ஸ்டான் பந்திலும் தனது விக்கெட்டுக்களை பறி கொடுத்தார்.இந்த டெஸ்ட் தான் ஜார்ஜ் பியூல்லர்டனின் அறிமுக டெஸ்ட் ஆகும்.இவரால் மொத்தமே 7 டெஸ்டுக்கள் மட்டும் தான் ஆட முடிந்தது. குறிப்பாக இவர் ஆடிய மொத்த டெஸ்ட் இன்னிங்ஸ்கள் 13.

4. நியூசிலாந்தின் வேர்டுன் ஸ்காட் (1949):

மன்செஸ்டர் டெஸ்டில் நியூசிலாந்து துவக்க வீரர் வேர்டுன் ஸ்காட் இரண்டு இன்னிங்சிலும் போல்ட் அவுட் ஆனார்.எடுத்தது இரண்டு முறையும் 13 ரன்கள்.இவர் ஆடியது மொத்தம் 10 டெஸ்டுக்கள் மட்டுமே.

5. இங்கிலாந்தின் ஜிம்மி பிங்க்ஸ் (1964):

கொல்கத்தா டெஸ்டில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜிம்மி பிங்க்ஸ் இரண்டு இன்னிங்சிலும் துவக்க வீரராக களம் இறங்கினார்.இரண்டு இன்னிங்சிலும் இவர் 13 ரன்கள் எடுத்த பொழுது இவரை அவுட் செய்தவர் சலீம் துரானி.ஜிம்மி பிங்க்ஸ்ஸின் கடைசி டெஸ்ட் இந்த ஆட்டம் தான்.

6. இந்தியாவின் பிஷன் சிங் பேடி (1975):

பம்பாய் டெஸ்டில் மேற்கு இந்திய தீவுக்களுக்கு எதிரான டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 13 ரன்கள் பதிவு செய்தவர் இந்திய வீரர் பிஷன் சிங் பேடி.முந்தைய இரண்டு டெஸ்டுக்கள் ஆன கல்கத்தா,மெட்ராசில் இந்திய அணி வெற்றி பெற தனது பங்களிப்பை அளித்த பிஷன் சிங் பேடி இந்த டெஸ்டில் அவ்வளவு சிறப்பாக பந்து வீசவில்லை.அதிக ரன்கள் விட்டு கொடுத்தார். மேற்கு இந்திய தீவுக்கள் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் இந்த பம்பாய் டெஸ்டை வென்றதும் அல்லாமல் தொடரையும் வென்று சாதனை புரிந்துள்ளது.

இங்கு விவாதிக்கப்பட்ட வீரர்கள் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 13 ரன்கள் எடுத்தது அல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்த ஒவ்வொரு.வீரர்களுக்கும் சிறப்பாக அமையாதது ஒரு வேளை தற்செயலானதோ (co-incidence)என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13 குறித்து கூடுதல் தகவல்கள் :

2615 டெஸ்டுகளுக்கு மேல் ஆடப் பட்டுள்ள ஆட்டங்களில்,13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெஸ்ட் மேட்ச்சுக்கள் இரண்டு மட்டுமே.

அவை,

1887 சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை 13 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி எடுத்தது 45 ரன்கள் மட்டுமே.ஆஸ்திரேலிய அணி 119 ரன்கள் எடுத்து முன்னிலையில் இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவித்த நிலையில் ஆஸ்திரேலிய அணியால் 97 ரன்களே எடுக்க முடிந்தது. முடிவில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி வாகை சூடியது.

2004 மும்பை டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது.

மும்பை டெஸ்ட். ஆஸ்திரேலிய அணி ஸ்கோர் 203 மற்றும் 93.இந்திய அணி ஸ்கோர் 104 மற்றும் 205.13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

​​​

13 டெஸ்டுடன் விடைபெற்றவர்கள்:

நியூசிலாந்தின் மெர்வ் வால்லஸ், இந்தியாவின் அர்ஷத் ஆயுப், முனாப் படேல் மற்றும் பாகிஸ்தானின் சலீம் இல்லாஹி ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com