‘ரிங்கு சிங் மற்றும் சர்ஃபராஸ் கானுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை:’ ரோஹித் சர்மா அதிரடி பதில்!

‘ரிங்கு சிங் மற்றும் சர்ஃபராஸ் கானுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை:’ ரோஹித் சர்மா அதிரடி பதில்!
Published on

ந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று முதல் டெஸ்ட் போட்டி மேற்கிந்திய தீவுகளின் டொமினிகாவில் தொடங்கி நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்தார்.

இந்த டெஸ்ட் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சர்ஃபராஸ் கான் மற்றும் ரிங்கு சிங் போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்றைய போட்டி துவங்குவதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மாவிடம், சர்ஃபராஸ் கான் மற்றும் ரிங்கு சிங் குறித்த கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். முதலில் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ருதுராஜ், ஜெய்ஸ்வால் இருவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் அபாரமாக செயல்பட்டு உள்ளனர். அதனால்தான் அவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழக்கப்பட்டு இருக்கிறது.

பொதுவாக, அணியில் 15 அல்லது 16 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், அனைத்து வீரர்களுக்கும் ஒரு நாள் அவர்களுக்கான வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும். ரிங்கு சிங், சர்ஃபராஸ் கான் ஆகியோருக்கு அவர்களுக்கான நேரம் வரும்போது நிச்சயம் அணியில் வாய்ப்பு வழங்கப்படும்" என்று கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com