இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழையுமா? இங்கிலாந்து அணிக்கு 169 ரன் வெற்றி இலக்கு!

இந்திய அணி
இந்திய அணி
Published on

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. அதில் இந்திய அணி 169 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களில் ராகுல் 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.ரோஹித் சர்மா 27 ரன்கள் எடுத்த நிலையில், அவுட்டானார். இந்த தொடர் முழுவதுமே ராகுல் சரியாக சோபிக்கவில்லை. தொடக்க ஆட்டம் சரியாக அமைத்ததால் இந்திய அணியின் ரன்குவிப்பு பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது. இன்றும் இதே நிலை எனலாம்.

INDIAN TEAM
INDIAN TEAM

அதன் பிறகு இறங்கிய விராட்கோலி அதிரடியாக விளையாடினார். இதனால் 50 ரன்கள் எடுத்த நிலையில், அவரும் வெளியேறினார். அதேநேரம் மறுமுனையில் விளையாடிய ஹர்த்திக் பாண்டியா 4 ரன்களுக்கும், 6 ரன்களுக்கும் பந்தை விளாசினார். இதனால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அவர் 33 பந்துகளில் 63 ரன்களை குவித்தார். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி சூர்யகுமார் யாதவ் 14 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார்.

england team
england team

விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டிய ஆகியோரின் ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி தற்போது களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடம் மோதும். இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழையுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com