இங்கிலாந்தை வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?

இங்கிலாந்தை வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. 2023 உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக வாங்கடே ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இங்கிலாந்து பங்கேற்ற மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணி சந்தித்த மூன்று போட்டிகளில் இரண்டில் வென்றுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் கலந்துகொண்ட போட்டிகளில் எதிர்பாராத தோல்விகளை சந்தித்துள்ளது. முந்தைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து தோல்வி கண்டது. தென்னாப்பிரிக்க அணி, நெதர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

மும்பை வாங்கடே ஸ்டேடியம் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனாலும், சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக பலனடைய வாய்ப்பு உள்ளது. மேலும் ஆடுகளம் பேட்ஸ்மென்களுக்கு சாதகமானதாக இருக்கும். எனவே இரு அணிகளும் ரன்கள் குவிக்கலாம்.

தற்போதைய சூழலில் டாஸ் ஜெயிக்கும் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்து எதிரணியை ஆடவிட்டால் சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் இருந்தாலும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எனினும் அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாக செய்திகள் வருவதால் மழையால் ஆட்டம் ரத்துச் செய்யப்படலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

கடைசியாக இங்கு 2016 ஆம் ஆண்டு டி-20 போட்டியில் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. எனினும் அந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் 7 முறை நேரடியாக மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 4 முறையும், தென்னாப்பிரிக்கா 3 முறையும் வென்றுள்ளது.

இங்கிலாந்து அணி: ஜானி பாரிஸ்டோவ், தாவித் மலான், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), லியம் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ், கிரிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீத், மார்க் வுட் மற்றும் ரீஸ் டாப்லே.

தென்னாப்பிரிக்க அணி: குயின்டன் டீ காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பாவ்மா (கேப்டன்), ராஸ்ஸி வாண்டர் டஸ்ஸன், அய்டன் மார்கரம், ஹென்ரிச் கிளாஸன், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், கேசவ் மஹாராஜ், லுங்கி நகிடி, காகிஸோ ரபாடா மற்றும் தப்ரைஸ் ஷாம்ஸி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com