விம்பிள்டன் 2023: இறுதிச்சுற்றில் ஜோகோவிச், அல்காரஸ் மோதல்!

மாதிரி படம்
மாதிரி படம்

லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீர்ர் கார்லோஸ் அல்காரஸ் இருவரும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு இடையிலான இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜோகோவிச், இத்தாலியின் சின்னரை 6-3, 6-4, 7-6 (4) என்ற செட்கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் டானில் மெட்வதேவை, கார்லோஸ் அல்காரஸ் 6-3, 6-3, 6-3 என்ற செட்கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

2013 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த ஜோகோவிச், அதன்பிறகு சென்டர் கோர்ட் ஆட்டத்தை தவறவிட்டதில்லை. இந்த வெற்றியின் மூலம் அவர் 8-வது முறையாக விம்பிள்டன் போட்டியை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஜோகோவிச் பீட்டே சாம்பிராஸ்க்கு இணையானவர், ஆனால், ரோஜர் பெடரருக்கு ஒரு நிலை கீழானவர்.

அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் தொடக்கத்திலேயே சுறுசுறுப்பாக விளையாடினார். முதல் செட்டை 43 நிமிடங்களில் 6-3 என்ற புள்ளி கணக்கில் வென்றார். 21 வயதான சின்னரை தோற்கடிக்க ஜோகோவிச்சுக்கு 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஆனது. பின்னர் கடுமையாக போராடி 6-4, 7-6 (4) என்ற செட் கணக்கில் சின்னரை வென்றார்.

போட்டியின் முதல் ஆட்டத்தில் ஒரு பிரேக் பாயின்டை அவர் எதிர்கொண்டார். ஆனால் அதுவே அவருக்கு முதல் இரண்டு செட்களில் பின்னடைவாக அமைந்த்து. எனினும் ஜோகோவிச்சின் பேக்ஹாண்ட் தாக்குதலால் நெருக்கடிக்கு உள்ளான இத்தாலியின் சின்னர் சில தவறுகளை செய்ய நேரிட்டது. 3-வது செட்டில் சின்னரை ரசிக்கர்கள் உற்சாகப்படுத்திய போதிலும் அவரால் ஜோகோவிச்சை வெற்றிகொள்ள முடியவில்லை. மீண்டும் அவர் தவறு செய்தது ஜோகோவிச் வெற்றிக்கு உதவியது.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீர்ர் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் டானில் மெட்வதேவை 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். 20 வயதான அல்காரஸ் 7 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டவென்ற ஜோகோவிச்சை இறுதிச் சுற்றில் சந்திக்கிறார்.

முதல் செட்டிலேயே முன்னிலை ஆட்டக்காரரான மெட்வதேவை 5-3 என்ற செட் கணக்கில் அல்கராஸ் வென்றார். தொடக்கத்தில் இருவருமே ஆக்ரோஷத்துடன் விளையாடினர். எனினும் அல்காரஸ் சளைக்காமல் ஆடி திறமையை வெளிப்படுத்தி மெட்வதேவை தோல்வி அடையச் செய்தார்.

இருவரும் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் விளையாடினர். இரண்டாவது செட்டில் சாதாரணமாக ஆடி இரண்டு பிரேக்குகளை அல்காரஸ் கொடுத்தார். ஆனால் அவற்றை மெட்வதேவ் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனினும் மூன்றாவது செட்டில் சுதாரித்து ஆடி அல்காரஸ், மெட்வதேவை 6-3 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.

விம்பிள்டன் இறுதிச்சுற்றை எட்டியுள்ள மூன்றாவது ஸ்பெயின் வீர்ர் அல்காரஸ். இதற்கு முன் மானுவல் சன்டானா மற்றும் ரஃபேல் நாடால் இருவரும் இறுதிச்சுற்றை எட்டியிருந்தனர். கடந்த மாதம் பிரெஞ்ச் ஓபன் அரையிறுதிப் போட்டியில் ஜோகோவிச்சிடம் தோற்ற அல்காரஸ் இந்த முறை எப்படியாவது போராடி ஜோகோவிச் பட்டம்பெறாமல் தடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com