மகளிர் ஐபிஎல் போட்டி: 3.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா!

மகளிர் ஐபிஎல் போட்டி: 3.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா!
Published on

ந்தியாவில் நடைபெறும் விளையாட்டுத் திருவிழாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியமானது. இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுடன் சேர்ந்து நான்கு வெளிநாட்டு வீரர்களும் சேர்ந்து விளையாடும் இந்தப் போட்டிகளை உலகம் முழுக்க உள்ள விளையாட்டு வீரர்கள் கண்டு களிப்பார்கள். இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஆண்கள் மட்டுமே விளையாடி வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் பெண்களும் விளையாடும் வகையில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய ஐந்து நகரங்களை அடிப்படையாகக் கொண்டு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த மாதம் நடத்தப்பட்ட அணிகளின் ஏலத்தில், அகமதாபாத் அணியை அதானி நிறுவனம் 1,289 கோடி ரூபாய்க்கும், மும்பை அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 912.99 கோடி ரூபாய்க்கும், பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் 901 கோடி ரூபாய்க்கும், டெல்லி அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் 810 கோடி ரூபாய்க்கும், லக்னோ அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 757 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்திருந்தன.

மகளிர் ஐபிஎல் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மும்பையில் 2.30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனாவை 3.4 கோடி ரூபாய் கொடுத்து பெங்களூரு அணி ஏலம் எடுத்துள்ளது. இவரை ஏலத்தில் எடுக்க மும்பை அணியும் பெரிதாக முனைப்பு காட்டியது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை அணி 1.8 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. அதேபோல், நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சோஃபி டிவைன் 50 லட்சம் ரூபாய் கொடுத்து பெங்களூரு அணி ஏலம் எடுத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com