மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மார்ச் 4 தொடங்குகிறது! கோடிக்கணக்கில் ஏலம் போன அணி எவை தெரியுமா?

மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மார்ச் 4 தொடங்குகிறது! கோடிக்கணக்கில் ஏலம் போன அணி எவை தெரியுமா?
Published on

மகளிர் ப்ரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் மும்பையில் பிராபோர்ன் ஸ்டேடியம் மற்றும் டி.ஒய்.பாடீல் ஸ்டேடியம் இரண்டிலும் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பி.சி.சி.ஐ.-யின் தலைமைச் செயல் இயக்குநர் ஹேமங்க் அமின் கூறுகையில், விளையாட்டு வீர்ர்களுக்கான ஏலம் பிப். 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் இறுதிப்பட்டியல் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அணியிலும் 15 முதல் 18 வீர்ர்கள் இடம்பெறுவார்கள். மொத்தம் 90 வீர்ர்கள் ஏலம் மூலம் விலைபேசப்படுவார்கள்.

தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி-20 மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் பிப்ரவரி 26 இல் முடிவடைகிறது. அடுத்த 8 நாட்களில் அதாவது மார்ச் 4 ஆம் தேதி ப்ரீமியர்

லீக் போட்டிகள் தொடங்கும். வீர்ர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்தியா திரும்புவது, அவர்களின் லக்கேஜ் வந்துசேர்வது உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதால் தொடக்கப்போட்டிகள் மும்பையில் நடைபெறும்.

மகளிர் டி-20 உலக கோப்பை ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நாளில் அதாவது பிப். 13 இல் வீரர்களின் ஏலம் நடைபெறும். முதல் முறையாக நடைபெறும் மகளிர் ப்ரீமியர் லீக்கில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும்.

மும்பை இண்டியன், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் தில்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட ஐந்து அணிகள் இதுவரை இல்லாத அளவாக மொத்தம் ரூ.4,669.99 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.

2008 ஆம் ஆண்டு ஆடவர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் அணி ஏலம் போன தொகையைவிட மகளிர் ப்ரீமியர் லீக் அணி அதிக தொகைக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது. அதாவது ரூ.4,669.99 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

மும்பை இண்டியன், தில்லி கேபிடல் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காக

இந்த போட்டிகள் மும்பை, தில்லி மற்றும் பெங்களூரில் நடைபெறும். மகளிர் ப்ரீமியர் லீக் சீசனுக்காக (2023-2027) டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஏலம் விரைவில் நடைபெறும். இதில் பங்குபெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை ரூ.1,00,000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என நிர்வாக கவுன்சில் அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com