மகளிர் டி20: இங்கிலாந்தின் சவாலை சமாளிக்குமா இந்திய அணி?

Women's T20: Ind Vs Eng
Women's T20: Ind Vs Eng
Published on

டி-20 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்போட்டியின் முதல் போட்டியில் இன்று இங்கிலாந்தை இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது. 2023 ஆம் ஆண்டில் ஓரளவு வெற்றிகளை குவித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான சவாலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணிக்கு 2023 சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் வங்கதேசத்தை 2-1 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை இந்திய மகளிர் அணயினர் தட்டிச் சென்றனர். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியிலும் இறுதிச்சுற்றுவரை தாக்குப்பிடித்தது.

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி தனது தடத்தை பதியவைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இந்திய மகளிர் அணியில் நட்சத்திர வீராங்கனைகளும், இளம் வீராங்கனைகளும் கலந்து இருப்பதால் இங்கிலாந்தை சமாளிக்கும் திறனும் நம்பிக்கையும் பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் டி-20 சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கு முன்னதாக இங்கிரலாந்து அணி கடந்த நவம்பர் 17 முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை ஓமனில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளது. டி-20 உலக கோப்பை போட்டியில் ஏற்கெனவே இங்கிலாந்தும், இந்திய அணியும் அரையிறுதியை எட்டியிருந்தது. எனினும் அடுத்த போட்டி வரும் 2024 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளதால் அதற்குள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள இந்த டி-20 போட்டி, இந்தியா, இங்கிலாந்து அணிக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

உள்நாட்டில் நடைபெற்ற டி-20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக 9 போட்டிகள் நடந்த போதிலும் இந்தியா இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.

பொதுவாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளின் முடிவுகளை பார்த்தால் இந்திய மகளிர் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை என்றே சொல்லவேண்டும். அதாவது 27 போட்டிகளில் 7-ல் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. 202 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் லக்னெளவில் நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன் பிறகு நான்கு போட்டிகளில் இந்தியா தோற்றது. ஒருபோட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

தீப்தி சர்மா 16 போட்டிகளில் பங்கேற்று 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆனால், சமீபகாலங்களில் கேப்டன் ஹர்மன் ப்ரீத், ஜெமீமா ரோட்ரிக்ஸ், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தமான ஆகியோர் சிறப்பாகவே விளையாடியுள்ளனர். மேலும் இந்த முறை ஸ்ரேயங்கா பாடீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக் ஆகிய புதுமுகங்கள், அனைவரும் சுழற்பந்துவீச்சாளர்கள், அணியில் இடம்பெற்றுள்ளனர்.

எனவே இங்கிலாந்தின் சவாலை இந்திய அணி நிச்சயம் சமாளிக்கும் என்றே கருதலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com