மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்: சர்வதேச டி20 போட்டியில் சாதனை படைத்த தீப்தி ஷர்மா!

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்: சர்வதேச டி20 போட்டியில் சாதனை படைத்த தீப்தி ஷர்மா!

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் குரூப் சுற்று ஆட்டத்தில் இந்தியா தனது 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸை சந்தித்த நிலையில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், தீப்தி ஷர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்களை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனையையும் படைத்தார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், துவக்க ஆட்டக்காரர்களாக ஹேய்லி மாத்தீவ்ஸ், ஸ்டபானி டெய்லர் இருவரும் களமிறங்கினர். இதையடுத்து இந்திய அணி சார்பாக 2வது ஓவரை பூஜா வஸ்த்ராகர் வீசிய நிலையில், ஹேய்லி மாத்தீவ்ஸ் அவுட்டானார்.

அதன்பின்னர் விக்கெட் எதுவும் விழாதவாறு, டெய்லர், கேம்பெல்லே இருவரும் பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர்.

இந்நிலையில் ஆட்டத்தின் 14வது ஓவரை சுழற்பந்து வீச்சாளரான தீப்தி ஷர்மா வீசவந்தார். அவரது திறமையான பந்து வீச்சால் அந்த ஓவரின் 3வது மற்றும் 6வது பந்தில், பொறுமையாக விளையாடி வந்த கேம்பெல்லே மற்றும டெய்லர் இருவரும் தனது விக்கெட்டைப் பறிகொடுக்கவே வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவு ஆரம்பமானது.

சிறப்பாக பந்து வீசிய தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளை எடுத்ததோடு மட்டுமல்லாமல், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்களை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனையையும் படைத்தார்.

இந்நிலையில், 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி அதிரடி ஆட்டத்தை துவக்கியது. அதன் தொடர்ச்சியாக ஷஃபாலி வர்மா 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் இருவரும் சொற்க ரன்களில் ஆட்டமிழந்தாலும் அடுத்து களமிறங்கிய ஹர்மன்ப்ரீத் கர் 33 ரன்களும், ரிச்சா கோஷ் 44 ரன்களும் எடுக்கவே, இந்திய அணி 18வது ஓவரிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அபார வெற்றியை பெற்றது.

இந்நிலையில் தீப்தி சர்மாவுக்கு ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது.

2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளைப் பெற்று இந்தியா புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. சனிக்கிழமை நடைபெறும் அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த அணியான இங்கிலாந்துடன் இந்திய அணி மோத இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com