மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: இறுதிச்சுற்றில் நுழையுமா ஸ்பெயின்?

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: இறுதிச்சுற்றில் நுழையுமா ஸ்பெயின்?
Published on

களிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், ஸ்வீடன், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 2011ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய ஜப்பான் காலிறுதியிலேயே வெளியேறிவிட்டது.

இன்று நடைபெறும் அரையிறுதியில் ஸ்பெயின், ஸ்வீடன் அணியைச் சந்திக்கிறது. நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த நான்கு அணிகளுமே கோப்பையை கைப்பற்ற துடிப்புடன் உள்ளன. எனவே, இந்த முறை புதிய சாம்பியன் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது.

ஸ்பெயின் அணி தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் பின்னர் பலமடைந்து கோஸ்டாரிகா, ஜாம்பியாவை வென்றது. எனினும் ஜப்பானிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பின்னர் மீண்டுவந்து நெதர்லாந்து அணியை 2 - 1 என்ற கோல்கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இதனிடையே, ஸ்வீடன் அணி தொடர்ந்து சிறப்பாக ஆடி ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. அந்த அணியின் கோல்கீப்பர் ஜெக்ரியா முஸோவிக் மற்றும் தற்காப்பு ஆட்ட வீராங்கனை அமன்டா லீஸ்டெட் இருவரும் தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு எதிராக தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஆடினர். எனினும், ஜப்பான் அணியுடனான ஆட்டம் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. எனினும் அதிலிருந்து மீண்டுவந்து அரையிறுதிக்கு தகுதிபெற்றனர்.

போட்டியை இணைந்து நடத்தும் ஆஸ்திரேலிய அணியின் விளையாட்டை மறக்க முடியாது. அந்த அணியின் நட்சத்திர வீராங்கனை சாம் கெர் காயமடைந்ததால் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், அந்த அணியின் மதில்டா சிறப்பாக ஆடினார். ஒலிம்பிக் சாம்பியன்களான கனடா மற்றும் டென்மார்க அணிகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, காலிறுதியில் திறம்பட ஆடி பிரான்ஸை வென்றது. ஆஸ்திரேலிய அணியை பிரதமர் மற்றும் ரசிகர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.

நடப்பு ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்தும் அறையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணியின் சுறுசுறுப்பும், திறமையான ஆட்டமுமே இதற்கு முக்கியக் காரணமாகும். எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் லாரன் ஜேம்ஸ், சஸ்பெண்ட் செய்யப்பட்டு விளையாட முடியாத நிலையில், இங்கிலாந்துக்கு இந்த போட்டி சவால் நிறைந்ததாகவே இருக்கும்.

ஏற்கெனவே, மகளிர் உலகக்கோப்பையை வென்ற அணி எதுவும் அரையிறுதியில் இடம்பெறாததால் இந்தப் போட்டி பரபரப்பாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. களத்தில் உள்ள நான்கு அணிகளின் தனித்துவமான பலம், பலவீனம் ஆகியவை பற்றி முழுமையாக தெரியாத நிலையில் இரண்டு அரையிறுதி போட்டிகளும் திரில்லாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com