உலக செஸ் சாம்பியன்ஷிப்: பட்டத்தை வென்றார் கார்ல்சன்!

Praggnanandhaa
Praggnanandhaa
Published on

உலக செஸ் சாம்பியன்ஷிப் 2023ம் ஆண்டுக்கான தொடரின் இறுதிப் போட்டியில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

அசர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்று வந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் 2023ம் ஆண்டுக்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் 18 வயதான பிரக்ஞானந்தா கலந்துக்கொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தா 2023ம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை கைப்பற்றுவருவார் என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட செஸ் இறுதி போட்டியில், பிரக்ஞானந்தா நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். ஏற்கனவே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று உலகின் நம்பர் ஒன் வீரராக இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை 29 ஆவது இடத்தில் இருக்கும் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். முன்னதாக கடந்த இரு தினங்களாக நடைபெற்ற போட்டி இரண்டும் டிராவில் முடிந்த நிலையில், இன்றைய தினம் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான இறுதி மற்றும் மூன்றாம் ஆட்டம் தொடங்கியது. இப்போட்டியில் டை பிரேக்கர் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.

டை பிரேக்கர் சுற்றின் முதல் ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். இதனால் அடுத்த சுற்றில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் பிரக்ஞானந்தாவுக்கு ஏற்பட்டது. இறுதியில் டை பிரேக்கர் முறைப்படி சாம்பியன் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தியாவின் சார்பில் போட்டியில் கலந்துக்கொண்ட பிரக்ஞானந்தா உலக சாம்பியன்ஷிப் செஸ் 2023ம் ஆண்டுக்கான போட்டியில் ரன்னர் ஆப் இடத்தை பிடித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com