உலக கோப்பை கால்பந்து போட்டியை இலவசமாகப் பார்க்கணுமா? இதே.. ஒரு குட் நியூஸ்!

உலக கோப்பை கால்பந்து போட்டியை இலவசமாகப் பார்க்கணுமா? இதே.. ஒரு குட் நியூஸ்!

கத்தார் நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் அதிர்ச்சி தோல்விகளையும், வரலாற்று வெற்றியையும் செதுக்கிக் கொண்டிருக்கிறது. தினம் தினம் சுவாரஸ்யமாக போட்டிகள் சென்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தியை அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டிவிட்டரில் பதிவுட்டதாவது:

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை காலபந்து போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் இலவசமாக கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்

-இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com