உலகக் கோப்பை கால்பந்து போட்டி; முதன்முறையாக இன்று பெண் நடுவர்கள்!

கால்பந்து போட்டி
கால்பந்து போட்டி
Published on

கத்தாரில்  நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் குரூப்- இ பிரிவில் கோஸ்டா ரிகாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான ஆட்டம் இன்றிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு முதல் முறையாக பெண் நடுவர்கள் குழு களத்தில் இறங்குகிறது.

சர்வதேச 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் மொத்தம் 64 போட்டிகளில் விளையாடுகின்றன.

அந்த வகையில் குரூப் -இ பிரிவில் கோஸ்டா ரிகா மற்றும் ஜெர்மனிக்கு இடையிலான ஆட்டம் இன்று  நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு முதல் முறையாக பெண் நடுவர்கள் குழு களத்தில் இறங்குகிறது. ஆடவர் கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் பெண் நடுவர்கள் களமிறங்கப் போவது இதுவே முதல் முறையாகும்.

வரலாற்றில் பதிவாகப் போகும் இந்த போட்டியின் நடுவராக ஸ்டெஃபனி ஃபிராப்பர்ட், மற்றும் துணை நடுவர்கள் நியூசா பேக், கரென் டயஸ் ஆகியோர் கொண்ட பெண் நடுவர் குழு  களத்தில் இறங்குகின்றனர்.

இத்தகவலை ஃபிபா அமைப்பு தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் குரூப் - சி பிரிவில் போலந்துக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான ஆட்டத்தில் 4-வது நடுவராக இருந்த ஸ்டெஃபனி ஃபிராப்பர்ட் , இன்றைய ஆட்டத்தில் பிரதான நடுவராக செயல்படவுள்ளார்.

இவர் பிரான்ஸைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஃபிபா சர்வதேச நடுவர்கள் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளார். மேலும் நியூசா பேக் பிரேசிலையும், கரென் டயஸ் மெக்சிகோவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com