உலக பாரா பேட்மிண்டன் போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை! 

மனிஷா ராம்தாஸ்
மனிஷா ராம்தாஸ்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, ஜப்பான் டோக்கியோ நகரில் கடந்த அக்டோபர் 31-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. சுமார் 44 நாடுகளின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்திய அணியில்  38 பேர் கலந்து கொண்டனர்.

 இந்த உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மனிஷா ராம்தாஸ் தங்கம் வென்றார். அவருக்கு நேற்று சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மனிஷா ராம்தாஸ், தெரிவித்ததாவது;

 ‘’இந்த போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து 2024-ம் ஆண்டு பாரிஸில் நடக்க இருக்கும் பாரா பேட்மிண்டனில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளது.

அடுத்த வருடம் ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்வேன் என்று நம்புகிறேன். டோக்கியோ போட்டியின் இறுதியில் கொஞ்சம் கடினமாகவே இருந்தது. தமிழக அரசு ஊக்குவித்தால் இன்னும் அதிகளவில் வெற்றி பெறுவேன்’’ என அவர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com