உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2025 : இந்திய அணி யாருடன் மோதுகிறது? போட்டிகள் அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2025 : இந்திய அணி யாருடன் மோதுகிறது? போட்டிகள் அறிவிப்பு!
Published on

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட WTC 2023 இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதையடுத்து, WTC 2025 சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி, டி20 உலகக்கோப்பை போட்டி என பல போட்டிகளை நடத்தி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் ஐசிசி, டெஸ்ட் போட்டிகளுக்கும் தனி அங்கீகாரம் கொடுத்து கடந்த 2019ம் ஆண்டு முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தி வருகிறது. 2 வருடங்களாக நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்று அதில் வெற்றி பெறும் அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும்.

அதன்படி 2019-21ம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்த நியூசிலாந்து-இந்தியா அணிகள் மோதின. அதில் நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து 2021-23ம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதிய நிலையில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இரண்டுமுறை இறுதிப்போட்டிக்குள் சென்றும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்துவருகிறது.

இந்நிலையில், 2023-25ம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி,

மேற்கிந்திய தீவுடன் 2 டெஸ்ட் போட்டிகள் (ஜூலை 2023)

தென்ஆப்பிரிக்காவுடன் 2 டெஸ்ட் (டிச.-ஜனவரி 2023-24)

இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் போட்டிகள் (ஜனவரி-பிப்ரவரி 2024)

பங்களாதேஷ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் (செப்டெம்பர்-அக்டோபர் 2024)

நியூசிலாந்துடன் 3 டெஸ்ட் போட்டிகள் (அக்.-நவம்பர் 2024)

ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் (நவம்பர்-ஜனவரி 2024-25) விளையாடுகிறது.

இதில் நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் போட்டிகள் இந்திய மண்ணிலும், ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென்ஆப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் போட்டிகள் வெளிநாட்டு மண்ணிலும் நடைபெறவிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com