WT20 WC : 6வது முறை கெத்தாக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி!

WT20 WC : 6வது முறை கெத்தாக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டி தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள நியூலான்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற நிலையில், ஆஸ்திரேலியா மகளிர் அணி 19 ரன்கள் வித்தியாத்தில் வெற்றிபெற்று 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

நேற்று நடந்த மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியில், டாஸை வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.

வழக்கம்போலவே, ஆஸ்திரேலியா தனது பேட்டிங்கை சிறப்பாகவே தொடங்கியது. அடித்து ஆடும் நினைப்போடு ஆடிய அலிஸா ஹீலி 20 பந்துகளில் 3 பவுணடரிகள் எடுத்து 18 ரன்களில் அவுட்டாகினாலும், பெத் மூனே தனது அதிரடியான ஆட்டத்தால் 53 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 74 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினார். இவருடன் களத்தில் நின்ற ஆஷ்லெய்க் கார்ட்னரும் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் மூனேவின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் தென்னாப்பிரிக்கா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எப்படியாவது வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற வெறியுடன் லாரா வோல்வார்ட், டஸ்மின் பிரிட்ஸ் இருவரும் களம் இறங்கினர். ஒரு பக்கம் வோல்வார்ட் தனது வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 61 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்திச் சென்றாலும், மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் கொடுக்காமல் தங்களது விக்கெட்டை இழந்து வந்தனர்.

இறுதியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி, மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரில் 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com