WT20 WC : ரோட்ரிக்ஸ், கவுர் அதிரடியை வெளிப்படுத்தியும், அரையிறுதியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!

WT20 WC : ரோட்ரிக்ஸ், கவுர் அதிரடியை வெளிப்படுத்தியும், அரையிறுதியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!

பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் க்ரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிந்த நிலையில், நேற்று அரையிறுதிப்போட்டி ஆரம்பமானது. இதையடுத்து, அரையிறுதியின் முதல் போட்டியாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதின.

டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அலிஸா ஹீலே, பெத் மூனே துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நேற்றைய ஆட்டத்தில் வழக்கம்போல் ஆஸ்திரேலிய அணியில் நல்ல சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்திய நிலையில், 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியின் ஷிகா பாண்டே 2 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 1 விக்கெட்டும், ராதா யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணியில் ஷஃபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தானா இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்திய அணியில் துவக்க வீரர்கள் இந்த முறை எதிர்பார்த்தபடி நிலைத்து நின்று விளையாடாமல் ஷஃபாலி வர்மா 9 ரன்களுக்கும், ஸ்மிரிதி மந்தானா 2 ரன்களுக்கும், யாஷ்டிகா பாட்டியா 4 ரன்களுக்கும் அவுட்டாகவே, 23 ரன்களிலேயே இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

அடுத்து களமிறிங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் சேர்ந்து இந்திய அணியை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இந்நிலையில், இந்திய அணியை எப்படியாவது வெற்றிபெற செய்வார்கள் என்று நினைத்தபோது, ஆட்டத்தில் திருப்புமுணை ஏற்பட்டது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தும், ஹர்மன்ப்ரீத் கவுர் 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தும் அவுட்டாகினர்.

அதன்பின் வந்த வீரர்களும் சில ரன்களை எடுத்து அவுட்டாகவே இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com