WTC Final 2023 : டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய அஜிங்யா ரஹானே!

WTC Final 2023 : டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய அஜிங்யா ரஹானே!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் இருவரின் அபார ஆட்டத்தால் 469 ரன்களை குவித்தது.

இந்நிலையில், அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டம் சற்று சறுக்கலாக அமைந்ததால், மளமளவென விக்கெட்டுகளும் பறிபோக, நேற்றைய ஆட்ட நேர முடிவில் ரஹானே, ஸ்ரீகர் பரத் இருவரும் களத்தில் இருக்க, இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதையடுத்து இன்று 3ம் நாள் ஆட்டம் துவங்கிய நிலையில், 15 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டான நிலையில், ரஹானே சற்று பொறுப்புடன் விளையாடி, ஸ்கோரை சற்று உயர்த்தி உள்ளார்.

இது, ரஹானே விளையாடும் 83வது டெஸ்ட் போட்டியாகும். இப்போட்டியில் அவர் 69 ரன்களைக் கடந்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த 13வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ரஹானே இதுவரை 122 பந்துகளை சந்தித்து 89 ரன்களைக் குவித்துள்ளார். அதேசமயம், அணியின் ஸ்கோர் 259 ரன்கள் இருந்தபோது பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஷர்துல் தாகூர் எல்பிடபிள்யு முறையில் அவுட்டானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது.

அடுத்து ஒரு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் உணவு இடைவேளை வந்தது. இதையடுத்து, உணவு இடைவேளை முடிவுற்றதும் போட்டி தொடர்ந்து நடைபெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com