டி-20: கெத்து காட்டிய ஜெய்ஸ்வால்!

ஜெய்ஸ்வால்!
ஜெய்ஸ்வால்!
Published on

திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 ஒருநாள் சர்வதேச போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தால் அரசைதம் அடித்து வரலாறு படைத்தார் இந்திய அணியின் யஷாஷ்வி ஜெய்ஸ்வால். 25 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

23 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஜெய்ஸ்வால், இந்திய அணியின் ஸ்கோர் உயருவதற்கும் உதவினார். ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் சீன்அபோட்டின் பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்கள் குவித்தார். எனினும் மேலும் ரன்களை குவிக்க வேண்டும் என்கிற அவரது கனவு நிறைவேறவில்லை. 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் எல்லிஸ் பந்தை அடிக்க முற்பட்டு ஆதம் ஜம்பாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

குறைவான பந்துகளை சந்தித்து அரை சதம் அடித்த இந்திய வீர்ர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பிறகு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்  ஜெய்ஸ்வால், 2020 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அதிவேக அரைசதம் எடுத்து அசத்திய முதல் பேட்ஸ்மென் ரோகித் சர்மா.

சர்வதேச போட்டிகளில் காலடி எடுத்துவைத்துள்ள ஜெய்ஸ்வால், அடுத்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ள டி-20 உலக கோப்பை போட்டியில் இடம்பெற தயாராகி வருகிறார். 2023  ஐ.பி.ல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற அதிவேக அரைசதம் அடித்து கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்தவர் ஜெய்ஸ்வால் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com